இஸ்ரவேலும் சபையும் பாகம்- 4 ISRAEL AND THE CHURCH -4 53-03-28 1. கடந்த இரவில் நாம் புரட்டின எண்ணாகம் புஸ்தகத்தில், நான்கு கட்டங்களைப் பெற்றிருந்தோம். இந்த வாரத்தில், இஸ்ரவேல் புத்திரர்களின் சாத்திரையைக் குறித்து கவனிக்கும்படியாக - யாத்திரையின் மூன்று கட்டங்கள் உண்டு. ஒப்பிடுதல் நாம் ஒப்பிடுதலில் நம்பிக்கை கொள்வதால், பழைய (ஏற்பாட்டின்) சபையை புதிய (ஏற்பாட்டின்) சபையோடு ஒப்பிடுகிறோம்; மாம்சப்பிரகாரமாக அவர்கள்; ஆவிக்குரிய பிரகாரமாக நாம். கர்த்தர் நம்மைச் சந்தித்திருக்கிறார். 2. நாம் பின்னாகச் சென்று ஆபிரகாம். ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்பவர்களைக் குறித்து கவனித்து, பின்னர் அப்படியே எகிப்தின் அடிமைத்தனத்திற்கு வந்தோம். 3. பின்னர் கடந்த இரவில் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார், நாம் அவர்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்து, செங்கடல் வரை வந்து, அடிக்கப்பட்ட கன்மலையிடம், தேவனுக்கு முன்பாக அவர்களை நிற்க வைத்தோம். 4. இன்றிரவு நாம் அவர்களை காதேஸ்பனேயாவிற்கு, வெண்கல பலிபீடம் அல்லது மாறாக வெண்கல சர்ப்பத்திற்கு முன்பாக நியாயத்தீர்ப்பு ஆசனம் வரை அழைத்து வருவோம். 5. நாளை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால். நாம் அவர்களை சொந்த தேசத்திற்கு அழைத்துச் செல்வோம்.ஓ, என்னே-! வெளியே வாருங்கள், கர்த்தருக்குச் சித்தமானால் நாளை நாம் யோர்தானைக் கடக்கப் போகிறோம். யோசுவா அவர்களிடம், "இப்பொழுது ஒன்றுகூடுங்கள், நாம் யோர்தானைக் கடக்கப் போகிறோம்" என்றான். இப்பொழுது சற்று… 6. உங்களுக்குத் தெரியுமா, நம்மில் ஒருவரும், அல்லது எந்தவொரு ஊழியக்காரனும், தேவன் அவருடைய இருதயத்தில் என்ன வைத்திருந்தாலும், அவர் வேதவாக்கியங்களை நோக்கிப் பார்க்கும்போது, "நானாக இதை என் சுயத்தில் செய்கிறேனா அல்லது என்னை வழிநடத்த இங்கே இருப்பது பரிசுத்த ஆவியானவரா-?' என்றதான ஒரு சிறிய பயத்தைக் கொண்டிராத ஒருவரும் ஒருவரும் இல்லை. 7. நினைவில் கொள்ளுங்கள், விதைக்கப்பட்ட விதையானது, எங்கேயாவது ஓரிடத்தில் அது தன் பிடிப்பை எடுத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மக்களுடைய இருதயத்தில் விதைக்கப்படுகிற அந்த வித்து கலப்படமற்ற உண்மையான அசலான தேவனுடைய வித்தாக இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம், ஏனெனில், இந்த ஜீவியத்தில் நான் கூறினவற்றிற்காகவும் செய்தவற்றிற்காகவும் உங்களுடன் சேர்ந்து கணக்கு ஒப்புவிக்கும்படி என்றாவது ஒரு நாளில் நான் நியாயத்தீர்ப்பில் நின்றாக வேண்டும். நான் தவறாக வழிநடத்தினால், நான் ஒரு ஒரு தவறாக வழிநடத்துபவனாக கணக்கிடப்படுவேன். நான் நிச்சயமாக அதை செய்ய விரும்பமாட்டேன், தெரிந்தே செய்யவுமாட்டேன். 8. நாம் ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்பாக, அல்லது வார்த்தையின் பேரில் ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்பாக உங்களுக்குத் தெரியும். வேதம் இவ்வாறு கூறுகிறது: வெளிப்படுத்துதலின் புஸ்தகத்தில் யோவான் அதை கண்டபோது, அவன், தான் ஒரு புஸ்தகத்தைக் கண்டதாகவும், அது பின்னாக முத்திரையிடப்பட்டு, உள்ளும், புறம்பும் முத்திரையிடப் பட்டிருந்ததாகவும், அதை எடுப்பதற்கும் அல்லது பார்ப்பதற்கும்கூட பரலோகத்திலாவது, பூமியிலாவது. பூமியின் கீழாவது ஒரு மனிதனும் பாத்திரவானாக காணப்படவில்லை என்பதாகவும் கூறினான். அதன் பின்னர், உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி வந்து. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய கரத்திலிருந்து அதை எடுத்தது. அப்பொழுது மூப்பர்கள், "நீர் பாத்திரராக இருக்கிறீர்" என்று சத்தமிட்டார்கள். இப்பொழுது அந்த ஆட்டுக்குட்டியானவர் இன்றிரவு வந்து வார்த்தையை திறந்து கொடுப்பாராக. நாம் பக்கங்களை மீண்டும் வைக்க முடியும், (lay back the pages பக்கங்களை புரட்ட முடியும் - மொழிபெயர்ப்பாளர்), ஆனால் வார்த்தையை திறந்து கொடுக்கும்படி தேவாட்டுக்குட்டியே அதற்குத் தேவை. (It takes the Lamb of God). 9. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமா-? சகோதரர் ஜூனியர் (Brother Junior), நீங்கள் விரும்பினால், எங்களை ஜெபத்திலே வழிநடத்தும். ஜெபிக்கையில் தேவன் தாமே அவருடைய வார்த்தையை நமக்கு திறந்து கொடுப்பாராக. நீங்கள் விரும்பினால். (சகோதரர் ஜூனியர் ஜெபம் செய்கிறார் ஆசி.)சரி, இப்பொழுது கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. 10. இன்றிரவு, துவங்குவதற்கென்று, எண்ணாகம் புஸ்தகம் 13-ஆம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். நாம் அங்கிருந்து துவங்கி, பின்னர் நாம் தொடர்ந்து செல்லுவோம். நான் எப்பொழுதும் செய்வதைப் போல செய்ய முயற்சிக்க மாட்டேன், உங்களை அதிக நேரம் பிடித்து வைப்பது போன்ற... ஆனால் கூடுமானவரை உங்களை சீக்கிரம் அனுப்பி விடுவேன். பரிசுத்த ஆவியானவர். இது போதும் என்று சொன்ன உடனேயே நாம் சென்று விடலாம். 11. நாளை காலை, நினைவில் கொள்ளுங்கள், 9:30 மணியளவில் ஞாயிறு பள்ளி உண்டு. முன்னதாக அல்லது 10 மணியளவில், நாங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்போம். உங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள், இன்றிரவே கொண்டு வாருங்கள். கூட்டம் முடிந்த பிறகு. நாளைய தினத்தின் கேள்விகளுக்காக அதை மூப்பர்களிடம் கொடுங்கள், அப்பொழுது நான் அதை பெற்றுக்கொள்வேன் அல்லது ஏதாவது வழியில் கொடுங்கள். அதிக கேள்விகள் இருக்கிறது. நாளை இரவு, யோர்தானை கடந்து செல்லுதல். 12. இப்பொழுது, நாம் மூன்று பகுதிகளைப் பெற்றவர்களாய் இருந்தோம். யாத்திரையின் மூன்று நிலைகள்: எகிப்தில் இஸ்ரவேலர்கள்; வனாந்திரத்தில் இஸ்ரவேலர்கள்; சொந்த தேசங்களில் இஸ்ரவேலர்கள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பாலஸ்தீனாவில் 13. நல்லது. பின்னர் நாம் காண்பது என்னவெனில், ஒரு சிறு முன்னோட்டமாக, சபையை சற்று முன்னாக கொண்டு சென்று பார்க்கும்போது, தேவன் ஆபிரகாமை இரட்சிப்பார் என்றும். அவனுக்கு நிபந்தனையற்ற வாக்குத்தத்தத்தை, நிபந்தனையற்ற உடன்படிக்கையைத் தருவதாக வாக்கு பண்ணினார் என்பதாகவும் காண்கிறோம். தேவன் அவனையும் அவனது வித்தையும் இரட்சிப்பார்; அவனுடைய எல்லா வித்தையும் அல்ல, ஆனால் வாக்குத்தத்தத்தின் வித்தாகிய ஈசாக்கை. ஆபிரகாமுக்கு பதினொறு குமாரர்கள் இருந்தார்கள், ஆனால் ஒன்று மாத்திரமே வாக்குத்தத்தமாய் இருக்கிறது, அது ஈசாக்கின் வழியாய் வருகிறது. அதினிமித்தமே பவுல் ரோமர் 9ஆம் அதிகாரத்தில், "இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே, ஆனால் ஈராக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்" என்று கூறுகிறான். இப்பொழுது. தேவன் ஈசாக்கின் மூலமாக கிறிஸ்துவை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். கிறிஸ்து ஆபிரகாமில் இருந்தார், கிறிஸ்து ஈசாக்கில் இருந்தார். கிறிஸ்து யாக்கோபில் இருந்தார், கிறிஸ்து யோசேப்பில் இருந்தார், கிறிஸ்து மோசேயில் இருந்தார் என்று நாம் காண்கிறோம். 14. பழைய ஏற்பாடு முழுவதிலும் கிறிஸ்து காணப்படுகிறார், பழைய ஏற்பாடு முழுவதிலும், நமக்கு மாத்திரம் நேரம் இருக்குமானால்... ஏழு வருடங்களுக்கு முன்பாக இங்கே.. இக்கடைசி வாரத்தில்... கடந்த சில மாதங்களாக நாம் யாத்திராகம் புஸ்தகத்தின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் நாம் ஒவ்வொன்றையும் பொருத்திப் பார்த்துக் கொண்டு வருகிறோம். தீட்டுக்கழிக்கும் தண்ணீர் முதற்கொண்டு, சிவப்பு கிடாரி அது பழுப்பு (brown) நிறமுடையதாய் இருக்கக் கூடாது, அது சிவப்பானதாய் இருக்க வேண்டும்; ஊனமற்றதாய் இருக்க வேண்டும்; அது சுட்டெரிக்கப்பட வேண்டும். பின்னர் அது தீட்டுக்கழிக்கும் தண்ணீரில் போடப்பட்டு. பாவம் செய்தபின்னர் பாளையத்திற்கு புறம்பே சென்று கொண்டிருந்த ஜனங்கள் மீது தெளிக்கப்பட வேண்டும் போன்றவைகள், மேலும், எப்படியாக அந்த ஈசோப்பு மற்றும் அந்த கேதுரு மரங்கள்,சகலமும் கூட்டாக, எப்படியாக கூடாரத்திலிருந்த அந்த பலகைகள், எப்படியாக அந்த வெண்கல பலிபீடம், வெண்கல தொட்டி. சமுகத்தப்பங்கள் போன்ற அனைத்துமே கிறிஸ்துவையே சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தன என்று பார்த்தோம். அவருக்குள் நாம் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவில். 15. இப்பொழுது, இன்றிரவு நம்முடைய பாடப்பொருள் எவ்வளவு அருமையானதாய் இருக்கிறது-! எப்படியாக தேவன் இஸ்ரவேலை ஒரு முன்னடையாளமாக, நிகழப் போகிறவைகளுக்கு முன்நிழலாக கொண்டு வந்தார்-! 16. இப்பொழுது, தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததியார் அந்நிய தேசத்திலே நானூறு வருஷங்கள் பரதேசிகளாய் இருப்பார்கள் என்றும், அந்த நானூறு வருஷங்களுக்குப் பின்பு பலத்த கரத்தினாலே வெளியே கொண்டுவரப்படுவார்கள் என்றும் வாக்குபண்ணியிருந்ததைக் காண்கிறோம். தேவனுடைய வாக்குத் தத்தங்களானது எப்பொழுதுமே நிறைவேறுகிறதாய் (comes true) இருக்கிறது. தம்முடைய வார்த்தையே சரியானது என்பதாக தேவன் செய்கிறார். தேவனுடைய தீர்க்கதரிசன சக்கரங்களும் பற்சக்கரங்களும் மெதுவாக சுழல்கிறது, ஆனால் நிச்சயமாக, அது அதன் ஸ்தானத்திற்கு சரியாக வந்தடையும். 17. அதினிமித்தமாகவே இன்றிரவு, சபையின் இந்த யாத்திரையைக் குறித்து கவனிக்கையில், நாம் மறுபடியும் யாத்திரையில் இருக்கிறோம் என்பதாக நான் நம்புகிறேன். தேவனுடைய காரியங்களில் தோல்வியடைந்த (which failed God) சபை-ஸ்தாபனத்திற்கு பரிபூரணமான ஒரு முன்னடையாளமாக மோசே இருக்கிறான் என்று நான் நம்புகிறேன். மேலும், யோசுவா புதிய- புதிய வழிநடத்துகிறவனாய் இருக்கிறான், தேவனுடைய காரியங்களில் தோல்வி அடைந்ததாய் இருந்த சபையை இஸ்ரவேலை அப்பாலுள்ள வாக்குத்தத்தமான தேசத்திற்கு யோசுவா கொண்டு சென்றான், அவன் அதை பிரதிநிதித்துவப்படுத்துகிறான். எப்படியாக தேவன் முன்நாட்களில் அசைவாடினார் என்பதை நாம் கவனிப்போமானால், அது பரிபூரணமாய் இருக்கிறது. எல்லாம் நல்ல விதமாகத்தான் சென்றது. தாங்கள் நல்ல விதமாக குடியிருப்பதாக நினைத்தார்கள்; ஆனால், வாக்குத்தத்தின் காலம் நெருங்கி வருகையில், யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் எழும்பினான். காரியங்கள் வித்தியாசமாக நடக்க ஆரம்பித்தன. அது ஒரு விடுதலையின் நேரமாக இருந்தது. அவர்கள் கூக்குரலிட்டு முறை இட்டார்கள். பின்னர் தேவன் இறங்கி வந்து அவர்களை விடுவித்தார். எவ்வளவு பரிபூரணம்-! 18. அதன் பின்னர் தேவன் ஒரு மனிதனை அனுப்பினார். ஒரு பாலகன் பிறந்தான், ஒரு விநோதமான குழந்தை. ஒரு விநோதமான வாழ்க்கை முறையில் அவன் வளர்க்கப்பட்டான், ஆனால் தேவன் தன்னுடைய கரத்தை அவன் மீது வைத்திருந்தார். மோசே, எப்படியாக அவன் நாணலிலே ஒளித்து வைக்கப்பட்டிருந்தான். கிறிஸ்துவைப் போலவே, ஒரு உபத்திரவ காலத்தில் பிறந்தான். கிறிஸ்துவைப் போலவே. ஒரு அழகுள்ள பிள்ளையாக பிறந்தான். கிறிஸ்துவைப் போலவே. ஒரு விடுதலை நாயகனாக இவ்வுலகில் பிறந்தான். மேலும், ஓ, எப்படியாக அவன், அவனுடைய கிரியைகள், அதாவது எப்படியாக மலை மேல் சென்று, 40 நாள் தங்கியிருந்து, நியாயப்பிரமாணத்துடன் திரும்பி வந்து, ஒரு சட்டம் அளிப்பவனாக (law-giver) காணப்பட்டான். மேலும் அவன், அவனை சூழ்ந்திருந்த பாவமானது அந்த கோபமே, அவன் கட்டளைகளை உடைத்துப் போட்டான். மீண்டும் மேலே சென்று, ஆசாரியத்துவம் நிச்சயம் நீக்கப்பட வேண்டும். கடந்து போக வேண்டும் என்பதை காண்பித்தான். (Must die, pass away) 19. இயேசுவும் வனாந்திரத்திற்கு சென்று, 40 நாள் சென்ற பின்பு வெளியே வந்த போது, மோசேயிடம் செய்தது போலவே, சாத்தான் இயேசுவை சரியாக அவருடைய பெலவீனமான பகுதியில் சந்தித்தான். பசியே இயேசுவினுடைய பெலவீனமாயிருந்தது. அவன், "நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி கட்டளை இடும்" என்றான். 20. அதற்கு இயேசு, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் பிழைப்பதில்லை' என்று எழுதி இருக்கிறதே" என்றார். அப்பொழுது, தான் சந்தித்தது மோசே அல்ல என்று அவன் அறிந்து கொண்டான். இயேசு வார்த்தையை அறிந்திருந்தபடியால், மோசேயைக் காட்டிலும் மேலான ஒருவரை தான் சந்தித்திருந்ததை அவன் அறிந்து கொண்டான். 21. இன்றைக்கு சபையானது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்குமானால், அது தேவனுடைய வார்த்தையே, மேலும், அதை எப்படியாக ஒருங்கிணைத்து அதை உங்கள் இருதயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் (apply It) என்பதே. 22. ஏனென்றால், சகோதரனே. இந்நாளானது, நீங்கள் எனக்கு சாட்சி கொடுப்பீர்கள், இந்த நாளானது கோட்பாடுகளின் நாளாக' இருக்கிறது. (ism இசம்). நான் ஆதியாகமத்தின் பேரில், ஆதியாகமத்தின் காரியங்களை இரண்டு வருடங்களாக இப்பொழுது ஆராய்ந்து வருகிறேன். அதுவே துவக்கமாய் இருக்கிறது, அதுவே வித்தாய் இருந்து (seed chapter), தொடர்ந்து செல்கிறது. இந்நாளின் மதக் கோட்பாடுகள் அனைத்தும் ஆதியாகமத்தில் துவங்குகின்றன என்று நீங்கள் காணலாம். முன்னதாக ஆதியாகமத்தில் அவர்களுடைய காரியங்கள் துவக்கப்பட்டு இக்கடைசி நாட்களில் இங்கே முடிவடைகிறது. 23. அவர்களில் அநேகர். உதாரணமாக காயீனில், ஸ்தாபிக்கப்பட்ட மதமானது துவங்கினது. அது எப்படியாக தொடர்ந்து வந்து நோவாவின் குமாரர்களினூடாக காம் வழியாக தொடர்ந்து வந்தது. பின்னர் காம் வழியாக நிம்ரோத் வந்தான். நிம்ரோத் பாபேலின் கோபுரத்தை கட்டினான். பாபேலானது நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலங்களினூடாக தொடர்ந்து வந்து பின்னர் வெளிப்படுத்தின விசேஷத்தில் பாபிலோனாக வருகிறது. எப்படியாக அந்த சிறு விதையானது முன்னே ஏதேன் தோட்டத்தினுடைய கீழ்வாசல் வழியாக துவங்கி, தொடர்ச்சியாக வந்து பின்னர் முடிவடைகிறது. அனைத்து வகையான மத சம்பந்த கோட்பாடுகளும் முன்னே அங்கே துவக்கத்தை கொண்டிருந்து இறுதியில் தானாக முடிவடைகிறது. 24. இப்பொழுது, அதைக் குறித்து கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை அது கொடுக்கிறது. கவனமாக இருங்கள். வார்த்தையில் நிலைத்திருங்கள். வேதப்பூர்வமற்ற அநேக காரியங்கள் இந்நாட்களில் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. நாம் வேதாகமத்தை கவனிப்போம். நாம் எதிலே சரியாய் இருக்கிறோம் என்பதைக் குறித்து நிச்சயமுடையவர்களாய் இருப்போம். அதைத் தான் இந்த வாரத்தில் நாம் போதிக்கும் படியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 25. இன்றிரவு சபையில் நான் காண்கிற மிகவும் பெரிதான காரியம் என்னவெனில், பயமே. ஏதோ ஓன்றைக் குறித்து ஒவ்வொருவரும் மரணபயம் கொண்டுள்ளனர். நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள்-? ஒரு மனிதன் மறுபடியும் பிறந்திருப்பானேயானால், அவன் கவலை அற்றவனாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இங்கே இவர்கள் பாடினது போன்றும், அங்கே அந்த மனிதர் சாட்சி பகர்ந்ததைப் போன்றும் வெறுமனே பாரம் அற்றவர்களாய் இருங்கள் (just free). உங்களை தொல்லைப்படுத்தக் கூடிய எதுவும் அங்கே இல்லை, நிகழ்காலத்திலோ. எதிர்காலத்திலோ, கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு எதுவும் நம்மை பிரிக்க முடியாது. தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்-! 26. அவர் தெரிந்து கொள்ளுதலினாலே அழைத்திருக்கிறார். அவர் தம்முடைய சபையை ஒழுங்கில் வைத்தார். இயேசு "பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால், ஒருவனும் என்னிடத்தில் வரான் என்றார். நீங்கள் விரும்பினீர்கள் என்பதினால் நீங்கள் ஒரு போதும் தேவனிடத்தில் வருவதில்லை. கிறிஸ்து உங்களை அழைத்தார் என்பதினாலேயே நீங்கள் வருகிறீர்கள். தேவன் உங்களை அழைத்திருக்கிறார். 'என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. நான் அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்." ஒரு வாரம் இருப்பதற்கு மட்டுமல்ல, ஒரு எழுப்புதல் தொடங்கி மறுஎழுப்புதல் வரைக்கும் மட்டுமல்ல, ஆனால் என்றென்றுமாக, நித்திய ஜீவன். "நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன். "ஒ.என்னே-! இது சாத்தானை நிலைகுலைய செய்யாவிட்டால் (take the wind out of) வேறு எது செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை. 'உங்களுக்கு எப்படி தெரியும்-?" என்கிறீர்கள். ‘இயேசு அவ்விதம் கூறியிருக்கிறார். கர்த்தர் உரைக்கிறதாவது" என்று நான் கூறினேன். 27. இயேசு அவ்விதம் கூறினார், அது அதை தீர்த்து வைக்கிறது. அவர் அதை கூறியிருந்தால், நான் அதை விசுவாசிப்பேன். யோவான் 5:24-ல் அவர், "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்" என்று கூறியுள்ளார், அது எனக்கு மிகவும் பிடித்தமான பகுதியாகும். "அது மிகவும் சுலபமானது, சகோதரன் பிரன்ஹாமே" என்று கூறுகிறீர்கள். 28. இயேசுவை கிறிஸ்து என்று தன் இருதயத்தில் விசுவாசித்து, பின்னர் தான் முன்பிருந்தபடியே தொடர்ந்து எந்த ஒரு மனிதனாலும் இருக்க முடியாது, எந்த ஒரு மனிதனாலும் முடியாது. முடியாது ஐயா. 29. நான் கடந்த இரவு கூறினதைப் போல, மது அருந்துவது. புகைப்பது, சூதாடுவது. அந்த எல்லா காரியங்களும் பாவம் அல்ல. சூதாடுவது பாவமல்ல, பாவமல்ல, அல்லது சூதாட்டம் பாவமல்ல. புகைபிடிப்பது பாவமல்ல, குடிப்பது பாவமல்ல, சாபமிடுவது பாவமல்ல, அது பாவத்தின் ஒரு தன்மையாகும்-! ஏனென்றால் நீங்கள் ஒரு பாவியாயிருக்கிறீர்கள், அதன் காரணத்தினாலேயே அதை நடப்பிக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்தால், அதைச் செய்ய மாட்டீர்கள். அவர், "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறுகிறவனிடத்தில் தேவ அன்பு இல்லை. அவனிடம் தேவ அன்பு இல்லை" என்று கூறியுள்ளார். ஆகவே நீங்கள் ஒன்று... நீங்கள் ஒரு போதும் ஒரு அரைகுறை கிறிஸ்தவனை (halfway christian) பார்த்திருக்க முடியாது. 30. அன்றொரு நாள் இரவு நான் ஒருவரிடம், "சகோதரனே, நீங்கள் ஒரு கிறிஸ்தவரா-?" என்று கேட்டேன். 'நான் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவன்" என்றார். "இல்லை, நீர் அவ்விதம் இல்லை" என்றேன். 31. மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவன்' என்பதாக எதுவும் இல்லை. குடித்ததும் தெளிவானதுமான ஒருவனை எவரேனும் பார்த்ததுண்டா-? கருப்பானதும் வெள்ளையானதுமான ஒரு பறவையை எவரேனும் பார்த்தது உண்டா-? ஒருவரும் இல்லை. ஒன்று நீங்கள்... பாவியாகவும் பரிசுத்தவானாகவும் இருக்கிற ஒருவனை நீங்கள் பார்த்திருக்க இயலாது. ஒன்று நீங்கள் மறுபடியும் பிறந்திருக்க வேண்டும் அல்லது மறுபடியும் பிறவாதவராக இருக்க வேண்டும். வேலியின் ஏதாவது ஒருபுறத்தில் நீங்கள் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள். உங்களிடம் எந்த ஒன்றும்... பழைய காரியங்களெல்லாம் ஒழிந்து போய் விட்டன, வெறுமனே அங்கே ஊற்று மாத்திரமே இருக்கும். கசப்பும் தித்திப்புமான தண்ணீர் ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்து சுரக்காது. பாருங்கள்-? மரமானது அது முளைப்பிக்கிற கனியாலே அறியப்படும். "அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிவீர்கள்." 32. வெகு காலத்திற்கு முன்பு, அனைத்து மெத்தடிஸ்ட் மக்களும், "நாங்கள் அதை பெற்றுக் கொண்டோம், எங்களால் சத்தமிட முடியும்" என்று நினைத்தனர். லுத்தரின் நாட்களுக்குப் பிறகு, சத்தமிடுவதால் அதை பெற்றுக் கொண்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். நானும் கூட சத்தமிடுதலில் நம்பிக்கை கொண்டு உள்ளேன், ஆனால், அந்த காரணத்தின் நிமித்தம் நான் அதைப் பெற்று விட்டேன் என்று அர்த்தமல்ல. அது (சத்தமிடுதல்). அதைப் பெற்றுக் கொண்டேன் என்பதன் ஒரு தன்மையாகும் (attribute). [சபையார் ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்.] 33. தொடர்ந்து பெந்தெகொஸ்தே வந்தது. அந்நிய பாஷைகளில் பேசுதல் வந்தது. அவர்கள், “ஓ, நாங்கள் அதைப் பெற்றுக் கொண்டோம் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறோம்" என்றனர். அவ்வாறு செய்தீர்கள் அல்லவா-? இப்பொழுது உங்கள் சிந்தையை மாற்றிக் கொண்டது போல் உள்ளது. ஆனால் அது அதுவல்ல. அது அதுவல்ல என்பதை நீங்கள் கண்டு கொள்ளுங்கள். 34. சகோதரனே-! "அன்பான மரிக்கும் ஆட்டுக்குட்டியே, பாவத்தை இனி செய்ய முடியாது என்ற அளவிற்கு மீட்கப்பட்ட தேவனுடைய சபையானது முற்றிலுமாக இரட்சிக்கப்படும் வரைக்குமாக உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தமானது தன்னுடைய வல்லமையை எப்போதும் இழக்காது." இங்கே என்ன உள்ளது என்பதைப் பாருங்கள், விசுவாசத்தால் எப்பொழுதும் நான் அந்த ஓடையை காண்கிறேன் உமது காயங்களில் வழிந்தோடும் ஓடையை மீட்கும் அன்பே எனது கருப்பொருள் நான் மரிக்கும்வரை அதுவே என் கருப்பொருள் 35. நான் மனுஷர் பாஷைகளைப் பேசினாலும், தூதர் பாஷைகளைப் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. மலைகளைப் பேர்க்கத்தக்கதாக எனக்கு வல்லமை இருந்தாலும், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. தீர்க்க தரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம். அறிவானாலும் ஒழிந்துபோம். ஆனால், பரிபூரண அன்பானது மனிதனுடைய இருதயத்திற்குள் வரும் போது, பாதாளத்திலுள்ள முழு பிசாசுகளாலும் கூட அதை எடுக்க முடியாது. அது சரியே. 36. என் மனைவி என்னைக் கண்டு அச்சப்படுவதினிமித்தம் அவள் எனக்கு மரியாதை செலுத்துகிறாள் என்றால், நான் அவளை... நான் ஒருவேளை அவளை தனியே விட்டுச் செல்ல பயப்படலாம். ஆனால் அவள் என்னை நேசிக்கிறாள். அவள் என் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறாள், ஏனெனில் நான் அவளை நேசிக்கிறேன் என்பதை அவள் அறிந்து இருக்கிறாள், அவளும் என்னை நேசிக்கிறாள். இப்பொழுது, நான் வெளியே செல்லும்போது, "திருமதி பிரன்ஹாமே, நீ என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகள் கொண்ட உத்தரவுகளை, உத்தரவுகளின் ஒரு தொகுப்பை நான் பட்டியலிடப் போகிறேன். நீ வேறு எந்த ஒரு மனிதனையும் நோக்கிப் பார்க்கக் கூடாது. நீ இதைச் செய்யக் கூடாது. நீ அதை மற்றும்..." என்று கூறத் தேவையில்லை. ஏன், அவள்... அவையெல்லாம் தானாகவே வருகிறது. நான் அவளை நேசிக்கிறேன். அவள் என்னை நேசிக்கிறாள். அது அதை தீர்த்து வைக்கிறது. நான் தொடர்ந்து செல்கிறேன் (I just go on). 37. கிறிஸ்துவுக்காக வாழ்வதும் கூட அந்த விதமே உள்ளது. அல்லேலூயா-! உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு சிந்தையோடும் அவரில் அன்பு கூர்ந்து தொடர்ந்து செல்லுங்கள், அவ்வளவு தான். எந்த ஒரு தீமையான காரியமும் வர முடியாது. அது சரியே. ஏனெனில் இங்கே, அனைத்து காரியத்திலும் நீங்கள் மரித்தவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் மரித்தவர்களாய் இருக்கிறீர்கள், உங்கள் ஜீவனானது கிறிஸ்துவின் மூலமாக தேவனில் மறைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் அங்கே முத்திரையிடப்பட்டுள்ளது. எப்படி பிசாசால் உங்களைப் பிடிக்க முடியும்-? முடியாது. 38. சரக்குப் பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அதில் பொருட்களை அடுக்கத் தொடங்குவார்கள், கிளம்பும் வேளையில் (on the track) பொருட்களை ஏற்றுவார்கள். இங்குள்ள உங்களில் அநேகர் கூட, அதில் பொருட்களை ஏற்றும் சிலரை நான் அறிவேன். அவர்கள் இங்குமங்குமாகச் சென்று, இந்த இடத்தை நிரப்புவதற்கும், அந்த இடத்தை நிரப்புவதற்கும் சொல்லுவார்கள். ஆனால் அந்த பெட்டியானது முத்திரையிடப்படுவதற்கு முன்பு, பரிசோதகர் வர வேண்டும். அனைத்தும் சரிவர இருக்கிறதா, சகலமும் இறுக்கமாக வைக்கப்பட்டுள்ளதா என்றும் அவர் உள்ளே பரிசோதித்துப் பார்க்கிறார். அது தன்னுடைய சேருமிடத்தை நோக்கிச் செல்லுகிறது. நல்லது, அதில் ஏதாவது தளர்வாக காணப்பட்டு, அது உடைந்து விடும் என்று அவர் பயப்படுவாரென்றால், உடனே அவர், அதை வெளியே எடுங்கள், சரியான விதத்தில் வரும் வரை அதை மீண்டும் அடுக்கி வையுங்கள்" என்பார். பின்னர் முற்றும் சரிவர இறுக்கமாக அடுக்கி வைக்கப்பட்டு முடிந்த பின்னர், அவர் கதவை மூடி அதை முத்திரை இடுவார். அது தன் சேருமிடத்தை அடையும் வரை அந்த முத்திரையை ஒருவராலும் உடைக்க முடியாது. அது சரியா-? 39. அந்த விதமாகத்தான் எபேசியர் 4:30-ல் உரைக்கிறது. "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாது இருங்கள்." இறுக்கமில்லாததால் ஏற்படுகிற சந்தடி சத்தத்தைப் பெற்றிருக்கிறீர்களா-? இராஜ்யத்திற்குள் நீங்கள் முத்திரையிடப்படுவதற்கு முன்பு, தேவன் அதை உங்களை விட்டு வெளியே எடுத்து பின்னர்- பின்னர் அதை சரியாக பொருத்துவார். 40. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இல்லாத இங்குள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும்; நீங்கள் அதைப் பெற்றிராததன் ஒரே காரணம் என்னவெனில், நீங்கள் விசுவாசிக்கவில்லை என்பதே. அது சரியே. விசுவாசம்-! இந்த வாரம் நாம் அதை எடுத்து, அதை நிரூபித்தோம், அதாவது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். விசுவாசத்தினாலே. அது சரி. 41. இப்பொழுது, தேவனை விசுவாசிப்பதற்கு பாப்டிஸ்ட் போதகமானது நல்லது தான். சகோதரர் டாம் (Brother Tom), உங்களுக்கு தெரியுமா, நீங்கள் பாப்டிஸ்ட் சபையை விட்டு வெளியே வருகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.அவர்கள். "தேவனை விசுவாசி" என்று கூறுகின்றனர். நானும் அதைச் செய்தேன். வெளியேறுவதற்கான ஒரு சிறந்த சபை அது தான். ஓ, ஓ-! என்னை மன்னிக்கவும். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. இப்பொழுது, ஒரு நிமிடம், பாப்டிஸ்ட்க்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை. அவர்கள் அநேக நல்ல காரியங்களைப் பெற்று இருக்கிறார்கள். 42. ஆனால், சகோதரனே கவனியுங்கள், அன்றொரு நாள் வானொலியில், ஒரு நபர், அருமையான பாப்டிஸ்ட் போதகர் ஒருவர். அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தை தவிர்த்துச் செல்ல முயற்சித்ததை கவனித்தேன். அவர், "அப்பொல்லோவிற்கு இயேசுவைத் தெரியாது. அதினிமித்தமே அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டியதாயிற்று என்று கூறினார். ஓ. அப்படியில்லை. 43. அப்பொல்லோ இயேசுவை அறிந்திருந்தான். தேவனுடைய வார்த்தையினால் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தான். ஆமென். அவன், "நீங்கள் விசுவாசிகளான போது ஞானஸ்நானம் பெற்றீர்களா-?" என்று கேட்டான். அது சரியே. 44. தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். அவன் வாக்குத்தத்தத்தை விசுவாசித்தான். மேலும், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது; ஆனால், வாக்குத் தத்தத்தின் ஒரு முத்திரையாக, அவர் அவனுக்கு விருத்தசேதனமாகிய அடையாளத்தைக் கொடுத்தார். [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] அல்லேலூயா-! விசுவாசத்தினாலே, நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் தேவனை விசுவாசித்து, அவரை ஏற்றுக் கொள்ளுகிறீர்கள். மேலும், நீங்கள் அதைச் செய்யும் போதெல்லாம், தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின பரிசுத்த ஆவியை, வாக்குத்தத்தத்தின் முத்திரையாக அவர் அதை உங்களுக்குத் தருகிறார். பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய ஈவு ஆகும். அது சரியே. அது இருதயத்தை விருத்தசேதனம் செய்கிறது. உபரியான மாமிசத்தை வெட்டி எடுத்து, உங்களை இயேசு கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக ஆக்குகிறது. ஆமென். [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்.] நல்லது. அங்கே தான் காரியம். நீங்களாக அதனோடு செய்வதற்கு எதுவுமில்லை. அது தேவனுடைய ஒரு ஈவு (gift) ஆகும். மேலும் நீங்கள் சரியான விதத்தில் விசுவாசிக்கும் போது, தேவன் அதை உங்களுக்கு தந்தருளுவார். அது விசுவாசத்தினாலேயே. இப்பொழுது விசுவாசம் அதுவல்ல. 45. நான் 25 சென்டு பணத்தையும், 25 சென்டு பெறுமானமுள்ள ஒரு ரொட்டித் துண்டையும் வைத்திருப்பது போல். 25 சென்டு... [சகோ.பிரன்ஹாம் ஒரு நாணயத்தை தவறவிடுகிறார்-ஆசி.) நான் அதை சற்றுக் கழிந்து எடுத்துக் கொள்கிறேன். 25 சென்டு என்பது அந்த ரொட்டித் துண்டு அல்ல. 25 சென்டு பணமானது ரொட்டித் துண்டை வாங்குகிறது. அது ஒரு... அது... அது ரொட்டித் துண்டை வாங்குகிற ஒன்றாயிருக்கிறது. ஒரு வேளை ஆப்பிரிக்கா பணமதிப்பிற்கு அது அரை பென்னி பணமாக இருக்கலாம், எனவே தான் அது கீழே விழுந்து விட்டது என யூகிக்கிறேன். [சபையார் சிரிக்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்.] நல்லது. 25 சென்டு என்பது அந்த ரொட்டித் துண்டு அல்ல, 25 சென்டு பணமானது அந்த ரொட்டித் துண்டை வாங்குகிறது. [100 பைசா சேர்ந்து இந்திய பணம் 1 ரூபாய் மதிப்பு போல 100 சென்டு சேர்ந்து அமெரிக்க பணம் I டாலர் ஆகும் மொழிபெயர்ப்பாளர்.] 46. விசுவாசம் என்பது நீங்கள் தேவனில் வைத்திருக்கும் ஒன்றாகும். அந்த உங்கள் விசுவாசத்திற்கான தேவனுடைய ஒரு அங்கீகரிப்பாக, பரிசுத்த ஆவியை அது உங்களுக்குத் தருகிறது. பரிசுத்த ஆவி உங்கள் இருதயத்தையும் செவியையும் விருத்தசேதனம் செய்கிறது. அது சரியா-? [சபையார் 'ஆமென்' என்கின்றனர்- மொழிபெயர்ப்பாளர்] உங்களை ஒரு புதிய சிருஷ்டியாக மாற்றுகிறது. 47. இப்பொழுது, விடுவிக்கும் பொருட்டு தேவன் ஆயத்தமாகுகிறார். மோசே, இஸ்ரவேல் புத்திரர்களை விடுவிக்கும் பொருட்டு, தன்னுடைய சொந்த மகனை விருத்தசேதனமின்றி அழைத்துக் கொண்டு, கீழே சென்று கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனின் நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். 48. நீங்கள் எப்பொழுதாவது அதைக் கூர்ந்து கவனித்தது உண்டா-? மோசே கோபத்தை உடையவனாயிருந்தான், இறுதியில் அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை விட்டே அவனை வெளியே இருக்கும்படி வைத்து விட்டது அவனுடைய கோபம். பின்னர் தேவன் அவனுக்கு சற்றுக் கோபக்காரியான மனைவியை கொடுத்து அவனை அங்கே இருக்கும்படி செய்தார். அந்த வனாந்தரத்தின் பின்புறம் அவர்கள் நிச்சயமாக ஏதோவொரு பிரச்சனையை கொண்டவர்களாய் இருந்திருப்பார்கள் என்று ஒரு சவாலாக கூறுகிறேன். நீங்கள் கூறவில்லையா-? உங்களை எப்படி அடக்கவேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். எனவே, ஒரு இளம் பெண்ணோடு அங்கே அவனுக்கு அத்தருணத்தை அவர் அமைத்துக் கொடுத்தார் (fixed him back out there) அவள் நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். என்னே-! அவனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதையும், அவனிலிருந்து கோபத்தை எப்படி வெளியே எடுக்க வேண்டும் என்பதையும் தேவன் அறிந்திருக்கிறார். நல்லது. 49. பின்னர் அவர்கள் தொடர்ந்து சென்றனர். அவன் அடையாளங்களையும், அற்புதங்களையும், மற்றும் அதிசயங்களையும் நடப்பித்தான். கவனியுங்கள்-! ஓ, என்னே-! என்னை ஏதோவொன்று தாக்குவது போல உணர்கிறேன்-! எப்படியாக அந்த யந்நேயும் யம்பிரேயும், அந்த இரண்டு ஜோசியக்காரர்கள் (astrologers), அங்கே நின்று கொண்டு, மோசேயும் ஆரோனும் செய்த அதே அற்புதங்களை நடப்பித்து, சரியாக அவர்களோடே கூடச் சென்றார்கள் என்பதை கவனியுங்கள். 50. ஆள்மாறாட்டம்-! சகோதரனே, இன்றைக்கு உலகம் முழுக்க நாம் அத்தகைய காரியத்தைப் பெற்றிருக்கிறோம். இன்றைக்கு, சபை முழுக்க அதைப் பெற்றுள்ளனர், (சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] மாம்சீக ஒப்பீடுகள். கவனியுங்கள். அதை அறுத்தெறிவதற்கு அங்கே ஒரு காரியம் உண்டு. அன்றொரு நாள் வானொலியில் ஒரு மகத்தான வேத போதகர், "தெய்வீக சுகமளித்தல் பிசாசினுடையது. தெய்வீக சுகமளித்தலை பிசாசு செய்தான்" என்றார். எங்கேயாவது பிசாசு தெய்வீக சுகமளித்தலை நடப்பித்தானா அல்லது எங்கேயாவது பிசாசு அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறானா என்பதைக் குறித்த வேத வாக்கியத்தை எனக்குக் காண்பியுங்கள். 51. "கர்த்தர் நானே." சங்கீத புஸ்தகம் 103:3-ல் தேவன், "உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே என்று கூறுகிறார். 52. மேலும் இயேசு, "சாத்தானை சாத்தான் துரத்தினால், அவனுடைய ராஜ்யம் பிரிந்திருக்குமே" என்றார்.(சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] அவனால் அதைச் செய்ய முடியாது. அவன் அவனையே துரத்த முடியாது. எனவே, எல்லா சுகமளித்தல்களும். அது எப்படி கிடைக்கப் பெற்றாலும், அது தேவனிடத்திலிருந்து மாத்திரமே வருகிறதாயிருக்கிறது. [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] 53. இந்த மந்திரவாதிகளை கவனியுங்கள். அவர்களால் பேன்களை கொண்டுவர முடிந்தது, ஆனால் அவர்களால் அதை நீக்கிப்போட முடியவில்லை. அவர்களால் சுகமாக்க முடியவில்லை. அவர்களால் அற்புதங்களைச் செய்ய முடிந்தது, ஆனால் அவர்களால் சுகமாக்க முடியவில்லை. சுகமளித்தல் தேவனுக்குள் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கொப்புளங்களை வரச் செய்த போது. எகிப்தியர்கள் அந்த கொப்புளங்கள் நிமித்தம் வாதிக்கப்பட்டனர். 54. “இது தேவனுடைய விரல்" என்று அவர்கள் கூறினார்கள். அல்லேலூயா-! அந்த 'தேவனுடைய விரலை' நான் எண்ணிப் பார்க்கிறேன். தேவன் மாத்திரம் அவருடைய விரலினால் ஒரு குருடான கண்ணைத் திறக்கக் கூடுமானால்; "இது தான் தேவனுடைய விரல்," இவை அனைத்தையும் செய்ய முடிந்தது. தன்னுடைய விரலைக் கொண்டு அவர் என்ன செய்தார் என்று பாருங்கள், அவர் வியாதியஸ்தரை சுகமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழுப்பினார். இவை அனைத்தையும் தம்முடைய விரலைக் கொண்டு நடப்பித்தார். ஆனால் அவர் ஒரு இழக்கப்பட்ட ஆட்டைத் தேடிச் சென்ற போது, அவர் தம்முடைய விரலை ஒரு போதும் உபயோகப்படுத்தவே இல்லை, அதை தம்முடைய தோளின் மேல் சுமந்து அதை உள்ளே கொண்டு வந்தார். அல்லேலூயா-! ஒரு இழக்கப்பட்ட ஆடு அவர் தோளின் மேல் இருக்கையில், என்னே ஒரு பாதுகாப்பு-! [சபையார் 'ஆமென்' என்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்.] அவருடைய விரல் அல்ல, அவர் அதை உபயோகப்படுத்தவில்லை. ஆட்டை உள்ளே கொண்டு வந்து சேர்ப்பதற்கு அவர் தமது தோளை உபயோகித்தார். கவனியுங்கள். 55. பின்னர் தேவன், மோசேயை சரிசெய்த பின்பு (fixing Moses), அவனை ஆயத்தப்படுத்தி, அடையாளங்களை அனுப்பினார். மேலும் அந்தக் கடைசி அடையாளமானது மரணம் ஆகும். நாம் அதை நேற்றிரவு தியானித்தோம். இப்பொழுது அந்தக் கடைசி வாதையானது, சபையிலுள்ள ஆவிக்குரிய மரணமே ஆகும், சபையானது உலர்ந்து போய், பறக்கடிக்கப் படுகிறது என்று காண்கிறோம். அது சரியே. நாம் ஒரு பயங்கரமான காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எப்படியாக ஜெயத்தை உண்மையாகவே பெற்றிருந்த பண்டைய காலத்தவர், அந்த சபையானது இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மரித்துக் கொண்டிருக்கிற நேரம், வாசலிலிருந்து இரத்தம் நீங்கிப் போகும்படி அனுமதிக்கின்றனர். 'அந்த இரத்தத்தை நான் கண்டு. உங்களை கடந்து போவேன்.'' 56. வருகிற வழியிலே, அவர்கள் அடிக்கப்பட்ட கன்மலையினிடம் வந்தார்கள். கன்மலையினிடம் வந்தபோது அவர்களுக்கு தேவைகள் இருந்தது என்பதை கவனியுங்கள். இப்பொழுது, மோசே ஒரு கோலைக் கொண்டு அந்த கன்மலையை அடித்தான். அது வரை நாம் நேற்றிரவு பார்த்தோம். கன்மலையை கோலினால் அடித்தான், அந்த கோல் தேவனின் நியாயத்தீர்ப்பின் கோலாகும். அவன் கன்மலையை அடித்தான், கன்மலையின் இடப்புறத்தில் ஒரு பிளவு இருந்தது. இஸ்ரவேல் புத்திரர்கள் பசியடைந்த போது. அவர்கள் அங்கே சென்றார்கள். அங்கே ஒரு தேன்கூடு, ஒரு தேன்பூச்சி அதில் சென்று ஒரு கூட்டை கட்டியிருந்தது. எனவே. கன்மலையிலிருந்து அவர்கள் தேனை பெற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையாயிருந்த அனைத்துமே கன்மலையில் இருந்தது. கன்மலையானது சபையை பின்தொடர்ந்தது. அந்த கன்மலை கிறிஸ்து இயேசுவே. அவர்கள் தாகமாய் இருந்த போது, கன்மலையிலிருந்து குடித்தார்கள். அவர்கள் பசியாயிருந்தபோது, கன்மலையிலிருந்து புசித்தார்கள். எங்கெல்லாம் அவர்கள் சென்றார்களோ, அங்கே கன்மலையும் பின் தொடர்ந்தது. இன்னமும் அந்த கன்மலையானது சபையை பின்தொடர்ந்து கொண்டு இருக்கிறது-! வனாந்திரத்திலிருந்த அந்த கன்மலை கிறிஸ்துவே. அப்படியானால் அதே கன்மலை தான்-! இப்பொழுது கவனியுங்கள். அவர் எருசலேமிற்கு சமீபித்து வருகையில், அவர்கள். 'அவனை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்; அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்" என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. 57. அவர், "இவர்கள் பேசாமல் இருந்தால் கல்லுகளே கூப்பிடும்" என்றார். அது என்னவாய் இருந்தது-? அந்த பிரதான மூலைக்கல் வந்து விட்டது. கல்லுகளில் மேல் உருளுகிறது. ஏதோவொன்று நடக்க வேண்டியதாயிருந்தது. கல்லுகள் கூப்பிடுகின்றன-! 58. பல வருடங்களாக பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீயானவள், அந்தக் கன்மலையிடம் பேசின போது, அந்த கன்மலை சுகமளித்தலைக் கொண்டு வந்தது. லாசரு மரித்தபோது, மார்த்தாள் அந்த கன்மலையிடம் பேசினாள். அப்பொழுது அது உயிர்த்தெழுதலை கொண்டு வந்தது. அவர்கள் கடலில் பிரயாணமாய் இருக்கையில், சுழல்காற்று உண்டான போது, ஒரு பாட்டில் அடைப்பான் நடுக்கடலில் கிடப்பது போல, படவு அவ்வளவாய் அலைவுபட்டது. 59. சில நாட்களுக்கு முன்பு, ஒரு பெண்மணி என்னிடம், "சகோதரர் பிரன்ஹாமே, இயேசு ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் மேம்பட்டவரல்ல" என்றாள். மேலும், "அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், ஆனால் நீங்கள் அவரை தேவனாக ஆக்க முயற்சிக்கிறீர்கள்" என்றாள். அதற்கு நான், 'அவர் தேவனாயிருந்தார். ஒன்று அவர் தேவனாக இருக்க வேண்டும் அல்லது ஒரு வஞ்சகனாக இருக்க வேண்டும்" என்றேன். "ஓ, அவர் ஒரு நல்ல மனிதனாக இருந்தார். அவர் ஒரு தத்துவவாதியாக இருந்தார். ஆனால், அவர் தேவனாக இருக்க முடியாது. அவர் தெய்வீகமானவரல்ல" என்றாள். அதற்கு நான், "அவர் தெய்வீகமானவர் தான். அவர் தெய்வீகமானவராக இருந்தாக வேண்டியிருந்தது. அவர் மனிதனாக மட்டும் இருந்திருப்பாரானால், அவர் இனச்சேர்க்கையில் பிறந்திருப்பார். ஆனால், ஒரு கன்னிப் பிறப்பின் மூலம் அவர் பிறந்தார், எனவே அவர் தேவனுடைய இரத்தமாயிருந்தார். வேதம்: தேவனுடைய இரத்தத்தால் நாம் இரட்சிக்கப் பட்டோம் என்று கூறுகிறது" என்றேன். அவளோ, "அவர் தேவனைக் காட்டிலும்... ஒரு-ஒரு-ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேம்பட்டவர் அல்ல என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கப் போகிறேன். மேலும் அவர் தெய்வீகமானவருமல்ல" என்றாள். அதற்கு நான், "வேதத்தைக் கொண்டு உன்னால் நிரூபிக்க கூடுமானால்'' என்றேன். "நான் நிரூபிப்பேன்" என்றாள். ''உன் வேதவாக்கியத்தை பார்ப்போம்" என்றேன். அவள், "யோவான் 11-ம் அதிகாரத்தில், அன்று இயேசு லாசருவின் கல்லறைக்குச் சென்ற போது" என்றாள். "எனக்கு ஞாபகம் இருக்கிறது" என்றேன். அவள், "அவர் அழுதார். வேதம் அவர் கண்ணீர் விட்டார் என்று கூறுகிறது" என்றாள். அதற்கு நான், "அது உண்மை தான். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்-?" என்றேன். "அவர் தெய்வீகமானவரல்ல என்பதை அது நிரூபிக்கிறது. ஏனென்றால், தெய்வீகமாக இருந்து கொண்டு அவரால் கண்ணீர்விட முடியாது" என்றாள். 60. அதற்கு நான், "இதோ பாருங்கள் பெண்மணியே, அவர் தேவனும்-மனிதனுமாய் இருந்தார். அவர் அங்கே கீழே சென்று அழுதார், கண்ணீர் விட்ட போது அவர் மனிதனாக இருந்தார். ஆனால், நான் உனக்கு சொல்லுகிறேன்: மனிதன் என்கிற திரையை நீக்கி, (pulled little frame) 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்' என்று சொன்னபோதோ-! [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] மரித்து 4 நாளான ஒரு மனிதனோடு அவர் பேசினார், அவனுடைய சரீரம் அழுகிவிட்டது, தோல் புழுக்கள் அதன் உள்ளும் புறம்பும் ஊர்ந்து கொண்டிருந்தன. அழிவு தன் எஜமானனை அறிந்திருந்தது-! 4 நாட்களாக மரித்துக் கிடந்த ஒரு மனிதன் காலூன்றி நின்று மீண்டும் ஜீவித்தான். அது ஒரு மனிதனைவிட மேம்பட்ட ஒருவர் பேசுவதாகும். அது தேவனாக இருந்தது" என்றேன். ஆம் ஐயா. 61. அன்று இரவு மலையின் மேலிருந்த அவர், திரும்பி வருகையில் அத்திமரத்தை சுற்றி புசிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று முழுவதும் தேட முயற்சி செய்கையில் அவர் மனிதனாக இருந்தார். அவர் பசியாயிருந்தார். அவர் பசியாயிருந்த போது அவர் மனிதனாய் இருந்தார். அவர் அந்த மரத்தின் மேல் நோக்கிப் பார்க்கையில் அவர் மனிதாயிருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐந்தாயிரம் பேருக்கு போஷிக்கையில் அவர் தேவனைவிட மேலாக... மனிதனைவிட மேம்பட்டவராக காணப்பட்டார். அது அந்த மனிதனுக்குள் இருந்த தேவனாகும். ஆம் ஐயா. 62. மெய்யாகவே, அந்த படவில் அவர் படுத்திருந்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார். படவின் நங்கூரமானது பாட்டில் அடைப்பானைப் போல அலைவுபட்டது; "ஓ. நான் அவரைத் தள்ளி விடுவேன். அவரை மேலும் கீழும் தூக்கி வீசுவேன்" என்று பல்லாயிரக்கணக்கான சமுத்திர ஆவிகள் அன்றிரவு அவரை மூழ்கடிக்க வேண்டும் என்று சபதமிட்டன. அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவரால் அசைய முடியாத அளவிற்கு அவ்வளவு சோர்வாய் காணப்பட்டார். ஆனால், அவர் தமது காலை கப்பற்பாயின் கயிற்றின் மேல் வைத்து, "இரையாதே, அமைதலாயிரு" என்று கூறின போது, காற்றும் அலைகளும் அவருக்கு கீழ்படிந்தன. அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானதாக இருந்தது. அது தேவனாக இருந்தது. ஆம் ஐயா. 63. அவர் கல்வாரியில் மரித்த போது, ஒரு மனிதனைப் போன்று இரக்கத்திற்காக கதறினார். அவர் மரித்த போது ஒரு மனிதனாக இருந்தார். ஆனால், அவர் உயிர்த்தெழுந்த போதோ, ஈஸ்டர் காலையன்று, அவர் தேவனாயிருந்தார். என்பதை நிரூபித்தார். அது சரியே. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்-! [சபையார் ஆர்ப்பரிக்கின்றனர்- மொழி பெயர்ப்பாளர்] 64. "ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும் போது அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்படும் போது அவர் என் பாவங்களை (தொலைதூரம்) கொண்டு சென்றார்; உயிர்த்தெழுந்த போது, அவர் என்னை இலவசமாய் நீதிமானாக்கினார்; ஒரு நாள் அவர் வருகிறார், ஓ. மகிமையான நாள்-!" என்று கவிஞன் கூறியதில் வியப்பொன்றுமில்லை. 65. அந்த தேவன் - மனிதன்-! தேவன் அவருடைய குமாரனில் இருந்தார். உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கினார். அவர்கள் அவரை ஒரு ஒரு மந்திரவாதி என்றும், ஒரு ஒரு குறி சொல்லுகிறவன் என்றும், ஒரு பிசாசு, ஒரு பெயல்செபூல் மற்றும் எல்லாவுமாக அழைத்தனர். ஆனால், அவர் தேவனாய் இருந்தார். இம்மானுவேலாக, நம்மோடு வாசம் செய்கிறவராக, உலகத்தை தமக்கு ஒப்புரவாக்குகிறவராக இருந்தார். காலையில் ஒரு கேள்வியின் பேரில் அதை கவனித்தோம், எப்படியாயினும், நாம் அதைப் பார்த்து, நாளை முடித்து விடுவோம். சரி. 66. அந்த அடிக்கப்பட்ட கன்மலையிடம் வருவோம். அவர்களுக்கு தேவை ஏற்பட்ட போது, அவர்கள் கன்மலையிடம் சென்றார்கள். இப்பொழுது, இவையனைத்திற்கு பின்பும் கூட, அந்த ஆசீர்வாதங்கள் மற்றும் யாவற்றிற்கு பின்பும் கூட அவர்கள் இன்னமும் முறுமுறுத்தார்கள். 67. அவர்கள் காதேஸ்பர்னேயா என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். நாம் இப்பொழுது அதைக் குறித்து சற்று படிக்க வேண்டும். அந்நாளில் காதேஸ்பர்னேயா என்பது உலகத்தின் நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருந்தது. இப்பொழுது எண்ணாகமம் 13-ம் அதிகாரத்தில் அதைக் காண்கிறோம். விரும்பினால் நீங்கள் அந்த வேதவாக்கியங்களை குறித்துக் கொள்ளலாம். அங்கே நியாயத்தீர்ப்பின் ஆசனம் இருந்தது. உங்களது தியானத்தில் அதற்கு முந்தைய அதிகாரத்தையும் படியுங்கள். இப்பொழுது இதைப் போன்ற 3 அல்லது 4 நாட்கள் எழுப்புதலில் நாம் அப்படிப்பட்ட உன்னதமான பகுதிகளை (high places) தொட்டுச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வசனமாக தியானிக்க இயலாது. ஆனால் அது ஒரு நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருந்தது. அங்கே ஒரு பெரிய கிணறு இருந்தது, அந்த மகத்தான பெரிய ஊற்றிலிருந்து தோன்றின ஊற்றுகள் அல்லது கிளையாறுகளினால் அநேக சிறிய கிணறுகளும் காணப்பட்டன. 68. காதேஸ்பர்னேயா, சபைக்கு ஒரு பரிபூரணமான முன்னடையாளம். சபை தான் நியாயத்தீர்ப்பின் ஆசனம். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குகிறது. 69. இஸ்ரவேல் காதேஸிலே கூடிவந்தார்கள். இப்பொழுது மோசே இங்கே கூறுகிறான். 13-ம் அதிகாரம் முதல் வசனம்; கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தை சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு: ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். 70. இப்பொழுது, கானான் தேசத்தை வேவுபார்க்கும்படி, அது நல்ல தேசமா இல்லையா என்பதை பார்க்கும்படி, ஒரு கோத்திரத்துக்கு ஒருவராக பன்னிரண்டு பேரை அவர்கள் கானான் தேசத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று தேவன் நியமனம் செய்தார். ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொரு வேவுகாரர் சென்றார்கள். தாண், ஆசேர் மற்றும் எல்லா கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக மொத்தம் பன்னிரண்டு பேரை தெரிந்துகொண்டனர். 71. நம்முடைய பிரயாணத்தில், இன்றைய சபையை அது மிகச் சரியாக குறிப்பிடுகிறது. இன்னுமாக நாம் பிரயாணத்தில் இருக்கிறோம். இன்றைக்கு சபையானது சரியாக காதேஸ்பர்னேயாவில் நின்று கொண்டிருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். நியாயத்தீர்ப்பு-! [சபையார் ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] இப்பொழுது, தேவனே எனக்கு உதவி செய்யும். இதை அறிந்துக் கொள்ள தேவன் எனக்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். அது நன்றாக ஆழமாக பதியட்டும். 72. வீரர்களை ('exploits' spirited or heroic act மொழிபெயர்ப்பாளர்.) அனுப்புதல். தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்த காரணத்தினால் தான் அவர்கள் இதுவரைக்கும் வந்திருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், வழிநெடுக அவர்கள் அடையாளங்களையும், அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்றிருந்தார்கள். இப்பொழுது சரியாக அவர்கள் தேசத்தின் எல்லையில் உள்ளனர். 73. இன்றிரவு நாம் தேசத்தின் எல்லையில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். என்னுடைய எல்லா கூட்டங்களையும் காரியங்களையும் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன், எப்படியாக அவைகளை நான் ரத்து செய்ய வேண்டியதாயிருந்தது-! சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலை பெற்றுக் கொள்வதற்கு முன்பு, அது எடுத்துக் கொள்ளப்படுதலின் விசுவாசத்தைப் பெற வேண்டியதாய் இருக்கிறது என்று நான் மெய்யாகவே விசுவாசிக்கிறேன். எடுத்துக் கொள்ளப்படுதலின் விசுவாசத்தை விடுங்கள், நாம் தெய்வீக சுகமளித்தலின் விசுவாசத்தைக் கூட பெற முடியாமல் இருக்கிறோமே. இந்த சரீரத்தை மாற்றுகிற, உயிர்ப்பிக்கிற மற்றும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஏற்ற ஒரு விசுவாசத்தை நாம் பெற வேண்டும். இன்றிரவு சபையானது அதன் பாதையில் இருக்கிறதென்றும், ஜீவிக்கிற தேவனுடைய ஒரு வல்லமை. அதாவது மனுஷர்கள் வார்த்தையை இங்கேயும் மற்றும் அங்கேயும் பேசுவார்கள், மேலும் அது மின்னலைப் போல் பிரகாசிக்கும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஒரு சபையானது வெளியே கொண்டிருக்கிறது; ஒரு உளவியலாளர் அல்ல (phychologist), வேஷத்தை தரித்தவர்கள் அல்ல, பாவனை விசுவாசியல்ல; ஆனால் ஒரு அசலான், மெய்யான, நேர்மையான, அபிஷேகிக்கப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட பரிசுத்த ஆவி சபையாகும்-! ஆமென். 74. இங்கே அவர்கள், காதேஸ்பர்னேயாவில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள். "நீங்கள் போங்கள். நம்முடைய பிதாக்கள் மூலமாக நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசமானது தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டது. நாம் ஆபிரகாமின் வித்தாக இருக்கிறோம். தேவன் நம்மை எகிப்திலிருந்து எல்லை தேசமாகிய காதேஸ் வரைக்கும் சுமார் நாற்பது மைல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தூரம் வரை தேவன் நம்மை பாதுகாப்பாக நடத்தி வந்தார்' என்றார்கள். சில நாட்களிலேயே அவர்கள் அங்கே வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாகவே அவர்கள் நாற்பது ஆண்டுகளாக அலைய வேண்டியதாயிற்று. 75. அவிகவாசம்-! கவனியுங்கள், நான் பேசிக் கொண்டிருக்கிற சபையானது. உவமையாக பேசுகிறேன். பழையது என்னவாக இருந்ததோ, புதியதும் அவ்வாறே இருக்கிறது, புதியது இன்னும் சற்று மிகைப்படுத்தப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. மாம்சப்பிரகாரமானது (natural) எவ்விதம் இருந்ததோ ஆவிக்குரியதும் அவ்விதமே இருக்கிறது. 76. இப்பொழுது காதேஸ். அங்கே அவர், "இப்பொழுது நீங்கள் போய் வேவு பாருங்கள்" என்றார். தேவனே அவர்களை அனுப்பினார்; மோசே அல்ல. தேவன் அவர்களை அனுப்பி, "நீங்கள் போய் தேசத்தை வேவு பார்த்து, அந்த தேசம் ஒரு நல்ல தேசமோ அல்லது கெட்ட தேசமோ, நம்மால் அதை எடுத்துக் கொள்ள முடியுமோ, இதையும் அதையும் மற்ற காரியங்களைக் குறித்தும் எங்களிடம் திரும்பி வந்து சொல்லுங்கள். நீங்கள் போய் அவற்றை கண்டறியுங்கள்'' என்றார். 77. பன்னிரண்டு பேர்கள் சென்றனர். அவர்கள் ஒரு மகத்தான திராட்சக்குலையை வெட்டினர். நீங்கள் ராகாப் வேசியையும் மற்றக் காரியங்களைக் குறித்தும் அறிவீர்கள். நல்லது, அவர்கள் அங்கே சென்று, இந்த திராட்சக்குலையை வெட்டி, பின்னர் திரும்பி வந்தனர். ஆனால் அந்த பன்னிரண்டு மனிதர்கள் சொன்ன அறிக்கையை கவனியுங்கள்-! 78. அந்த பன்னிரண்டு பேரில் பத்து பேர், "ஓ,அவர்கள் ஒரு பயமுறுத்துகிற ஜனங்கள்" என்றனர். (they are a fearful people.) இங்கே கவனியுங்கள், என்னே ஒரு என்னே - ஒரு காட்சி-! இதை கவனியுங்கள், இப்பொழுது நாம் 17-ம் வசனம் அல்லது 27-ம் வசனத்தை பார்க்கும் பொழுது, முன்னே செல்கின்ற அனுப்பப்பட்ட அந்த மனிதர்கள் அங்கே கூறுகிறார்கள். அவர்கள் திரும்பி வந்த பொழுது அவர்களுடைய இருதயம் நின்று போய், ஓ, அவர்கள் பலவான்களாய் இருக்கிறார்கள்'' என்றனர். இங்கே கவனியுங்கள். அவர்கள் அவர்களிடம்: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி (சரியாக தேவன் வாக்களித்தபடியே. இப்பொழுது கவனியுங்கள்) ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். அப்பொழுது காலேப் (அல்லேலூயா) மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். 79. ஆ, நான் அதை விரும்புகிறேன்-! என்னே-! இன்னும் சற்று முன்னாக. அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். 80. அதை கவனியுங்கள்-! "அவர்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல இருக்கிறோம்" என்று சொல்லும் அளவிற்கு போய் விட்டது. அதுவே அந்த அறிக்கை. 81. ஆனால் காலேபும் யோசுவாவும், நம்மால் அதை சுதந்தரிக்க முடியும்-! "நம்மால் அதை செய்ய முடியும்" என்றனர். எதனால் அவர்களுக்கு அதை செய்ய முடியும் என்பதாய் தென்பட்டது-? அதைச் செய்யும்படியான வாக்குத்தத்தத்தை தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்தார். நான் அந்த தைரியத்தை விரும்புகிறேன். 82. அவர்களில் பத்து பேர். இப்பொழுது சபையானது வந்தது. லூத்தர் காலத்தினூடாக, மெத்தடிஸ்ட் காலம். பெந்தெகொஸ்தே காலம் ஆகியவற்றினூடாக ஒரு இடத்திற்கு, இப்பொழுது அந்த ஒரு இடத்திற்கு அது வந்திருக்கிறது. மேலும் இப்பொழுது சில முழு சுவிசேஷக அமைப்பின் மக்களில் (full Gospel people) சிலர் தெய்வீக சுகமளித்தலுக்கு முற்றிலும் எதிராக திரும்பியுள்ளனர், பாவ நிவிர்த்தியில் கூட [atonement - பிரயாச்சித்தம் அல்லது பாவ நிவிர்த்தி அல்லது ஒப்புரவாகுதல் மொழி பெயர்ப்பாளர்] அப்படிப்பட்ட காரியம் இல்லை என்று அவர்கள் நம்புகின்றனர். நல்லது, அது ஒரு இடத்தை வந்தடைந்துள்ளது. நண்பர்களே, அங்கே நீங்கள்... அங்கே அது ஒரு பயங்கரமான நிலைமையை அடைந்து கொண்டிருக்கிறது. அவர்கள்: அது பழைய காலத்து மார்க்கம் என்றும். என்றைக்கோ முடிந்து போன ஒன்று என்றும், அதைப் பெற முடியாது, அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் கூறுகின்றனர். மேலும், "நாங்கள் நவீன காலத்தில் ஜீவித்து கொண்டிருக்கிறோம். நவீனமான திட்டங்களை வகுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சபையில் வாலிப பிள்ளைகளை தக்கவைப்பதற்கு, காய்க்கட்ட ஆட்டம், மேசைப் பந்தாட்டம் [shuffleboard பலகையை கொண்டு விளையாடும் விளையாட்டு வகைகள். Ping pong டேபிள் டென்னிஸ் மாதிரியான விளையாட்டுகள்-மொழிபெயர்ப்பாளர்] மற்றும் அது போன்ற காரியங்களை வைக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்'' என்கின்றனர். 83. சகோதரனே, சகோதரியே அது போன்ற ஒரு நேரத்தை நான் பெற நேர்ந்தால், அதாவது சபையில் மக்களை தக்க வைக்க சீட்டு விளையாட கொண்டாட்டம் (card party குழுவாக குடும்பமாக சேர்ந்து கேளிக்கையுடன் கூடிய விதவிதமான சீட்டு விளையாட்டுகள் விளையாடும் கொண்டாட்ட கூடுகை -மொழி பெயர்ப்பாளர்.] போன்றவற்றை வைக்க நேரிட்டால், நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை நிறுத்தி விடுவேன், ஏனெனில் அது (சபை) தன்னுடைய வல்லமையை இழந்து விட்டது. சகோதரனே. நான் உங்களுக்கு கூறுகிறேன், நமக்கு இன்று தேவையாய் இருப்பதெல்லாம் பண்டைய பாணியிலான எளிமையான சுவிசேஷம், தன்னுடைய எளிமையில் பிரசங்கிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் வல்லமை போன்றவைகளே. "நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்." ஆம், ஐயா. 84. நாமோ இன்றைக்கு... அவர்கள், எங்களால் பின்னாகச் சென்று அப்போஸ்தலர்கள் நடப்பித்த கிரியைகளை எங்களால் செய்ய முடியாது" என்கின்றனர். 85. தேவன் மாம்சமான யாவர் மீதும் அவருடைய ஆவியை ஊற்றுவதாக வாக்களித்த, அந்தக் கடைசி நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அல்லேலூயா-! நாம் இங்கு பாதையின் முடிவில் இருக்கிறோம். அல்லேலூயா, போவதற்குத் தயாராக உள்ள, போய் அதின் அத்தாட்சியைக் கொண்டு வரும் சில காலேப் மற்றும் யோசுவாவிற்காக நன்றி தேவனே-! அல்லேலூயா, அது ஒரு மகத்தான தேசம்-! இரண்டு திராட்சைக் குலைகளை கொண்டு வந்தார்கள், அதை இந்த விதமாகப் பிடித்துக் கொண்டு அவர்கள் நடந்து வந்தார்கள். என்னே ஒரு நிலம்-! என்னே ஒரு ஸ்தலம்-! கடந்து சென்ற ஜனங்களுக்காக நன்றி தேவனே, தங்கள் பழைய பாரம்பரியங்கள், வரையறைக்குட்பட்ட நிலை, தேவனற்ற சபை, குறுகிய மனப்பான்மை போன்றவற்றை கடந்து சென்ற ஜனங்களுக்காக நன்றி தேவனே. அல்லேலூயா-! கானான் தேசத்தில் அடியெடுத்து வைத்து ஒரு இடத்திற்கு வந்தார்கள், அங்கே அவர்கள் நல்லதும், பலிபீடத்திலேயே எச்சில் ஊறச் செய்யும் அளவிற்கு அருமையான நிறைய திராட்சைப் பழங்களையும் புசித்தார்கள். அல்லேலூயா-! சில பண்டைய பாணியிலான... திராட்சை ரசம் அருந்தியவர்களாய், பெந்தெகொஸ்தே நாளில், தேவனுடைய வல்லமை சபையை ஆட்கொண்ட போது (took over church) பேதுரு அருந்தியதைப் போல். அல்லேலூயா-! காதேஸ்பர்னேயா. நம்மால் அதை சுதந்தரிக்க முடியும். (சபையார் ஆமென்' என்கின்றனர் மொழி பெயர்ப்பாளர்] 86. ஒருவர் இவ்விதமாய் சொன்னார்: வெகு காலத்திற்கு முன் அவர்கள் செய்தது போல், நாம் பரிசுத்த ஆவியைப் பெற முடியும் என்று நீர் கூறுகிறீரா-? "ஆம், ஐயா." "இப்பொழுது, நீர் அதை எப்படி அறிவீர்-?' அதற்கு நான், "நான் அதை பெற்றுக் கொண்டேன். அல்லேலூயா-! அப்படித் தான் நான் அதை அறிந்து கொண்டேன்" என்றேன். 87. கடந்த இரவு நாம் ஒரு அழகான ஒப்பீடை பெற்றிருந்தோம். இஸ்ரவேல் புத்திரர்கள் தேசத்தை கடந்த போது... யாத்திரைக்குள்ளாக கடந்து சென்றனர், அது நம்முடைய யாத்திரைக்கு ஒரு பரிபூரணமான ஒப்பீடாக உள்ளது. நாம் கானானை விட்டு வெளியே வருகிறோம். (சகோ.பிரன்ஹாம் எகிப்தைவிட்டு என்பதற்கு பதிலாக கானானை விட்டு என்று குறிப்பிடுகிறார் - மொழிபெயர்ப்பாளர்.] தாங்கு கம்பங்களை, கூடாரங்களை கழற்றி அவைகளை விட்டுவிட்டேன். நீங்கள் விட்டு விட்டீர்களா-? அங்கே உள்ள பூண்டுகள், கறிப் பானைகள், உலகத்தின் நாற்றங்களை விட்டு விடுதல். கூடாரங்களை பெயர்த்து, வெளியேறி, யோர்தானை கடந்து விட்டோம். அல்லேலூயா-! இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய சிவந்த சமுத்திரமானது அனைத்து சிகரெட்டுகள், மோசமான புகையிலை, மற்றும் உலகத்தின் அருவருப்புகளை, அந்த ஆளோட்டிகளை மூழ்கச் செய்தது போல, மூழ்கடித்து விட்டது. அவைகள் கடலிலே மிதந்து கொண்டிருக்கின்றன. அல்லேலூயா-! (சபையார் ஆரவாரம் செய்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] நாம் நடனமாடி ஆரவாரம் செய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 88. மோசே என்ன செய்தான் என்பதை கவனியுங்கள். தன்னுடைய கரத்தை உயர்த்தி, ஆவியிலே பாடினான். மிரியாம் தம்புருவை எடுத்து நடனமாடத் தொடங்கி, மேலும் கீழும் குதித்து, தேவனை ஸ்தோத்தரித்தாள். இஸ்ரவேலின் குமாரத்திகள் அவளை பின்தொடர்ந்து, நடனமாடி தேவனை துதித்து ஆரவாரம் செய்தார்கள், அல்லேலூயா-! அவர்கள் சமுத்திரத்தை கடந்து சென்றார்கள். பின்னாக, அந்த பழைய ஆளோட்டிகள் எல்லாரும் மரித்தவர்களாய் அங்கே சமுத்திரத்தில் கிடந்தார்கள். அவர்கள் திரும்பிப் பார்த்து, 'பையனே. இனி மேல் உன்னால் என்னை ஒருபோதும் தொல்லைப்படுத்த முடியாது” என்றார்கள்.ஓ, என்னே-! எல்லா இணைப்புகளும் எரிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது போவதற்கு ஆயத்தமாக உள்ளனர். யாத்திரை துவங்கிவிட்டது. இப்பொழுது அவர்கள், "நாம் அதை சுதந்தரிக்க முடியுமா" என்கின்றனர். "நிச்சயமாக, நம்மால் சுதந்தரிக்க முடியும்." "ஏன்-?" "தேவன் அவ்விதம் கூறினார்-!" மேலும் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள்... தேவன் அவர்களுடைய தேவைகளை சந்திப்பதாக வாக்குத்தத்தம் செய்தார். நாம் அதை கடந்த இரவு பார்த்தோம். "எப்படி அவர்கள் அதை கொடுக்கப் போகிறார்கள்-?" "எனக்குத் தெரியாது." "நல்லது, ஒரு வேளை அவர்கள் எங்கிருந்தாவது மாவை அனுப்பலாம்..." "எகிப்திலே எதுவும் மீதியாக விடப்படவில்லை. எங்கிருந்து மாவானது வரப் போகிறது-?" என்னே-! அது என்னுடைய வேலையல்ல.' 89. யாரோ ஒருவர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார்: ''அந்த எலியாவைப் பற்றி, அந்த பறவையைக் குறித்ததான காரியத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-?" நான்,"நிச்சயமாக" என்றேன். "அந்த பிரசங்கியார் கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்த வேளையில் காகங்கள் அவனை போஷித்தது என்பதை நீர் விசுவாசிக்கிறீர் என்று என்னிடம் சொல்ல வருகிறீரா-?" என்றார். நான், "நிச்சயமாக" என்றேன். "அவைகள் அவனை போஷித்தன என்பது உமக்கு எப்படி தெரியும்-?" அதற்கு நான், "வேதம் அவ்விதம் கூறுகிறது" என்றேன். அது சரியே. அவர், "பிரசங்கியாரே, நான் உம்மிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இந்த உலகத்தில் அந்த காகங்கள் எங்கிருந்து அந்த அப்பங்களைப் பெற்றுக் கொண்டன-?" என்றார். அதற்கு நான், "எனக்குத் தெரியாது. அவைகள் கொண்டு வந்தன. எலியா புசித்தான். அவ்வளவு தான் எனக்கு தெரியும்" என்றேன். அப்பொழுது அவர், "நீங்கள் எல்லாருமே உணர்ச்சி வசப்பட்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார். அதற்கு நான், "இல்லை, அது எங்கிருந்து வருகிறது என்று என்னால் சொல்ல இயலாது, ஆனால் ஏதோ ஒரு இடத்திலிருந்து அது வருகிறது. தேவன் அதைக் கொண்டு வருகிறார். நாங்கள் அதை புசிக்கிறோம். அல்லேலூயா, அது களிகூருதலை கொண்டு வருகிறது-!" என்றேன். 90. அது எவ்வாறு நிகழ்கிறது-? எனக்கு தெரியாது. தேவன் அதை அனுப்புகிறார். நான் அதை பற்றிக் கொள்கிறேன். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக ஒரு கைநிறைய நான் பெற்றுக் கொண்டேன், அதை விழுங்கினேன், [சபையார் 'ஆமென்' என்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்] இன்னுமாக அது உள்ளே செல்ல செல்ல எனக்கு ஒரு விநோத உணர்வை (tickling அளிக்கிறது. அது நல்லதே-! உணர்ச்சிவசப்படவில்லை; நான் ஒரு பைத்தியக்காரன் அல்ல. அவ்வாறாக அழைக்கப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் பைத்தியக்காரன் அல்ல. நான் அவ்வாறாக இருந்தாலும், என்னை அப்படியே விட்டு விடுங்கள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அது சரியே. ஆம். ஐயா. நான் சரியாக இப்பொழுதே மிகவும் பக்திப்பரவசமாக உணர்கிறேன். நிச்சயமாக உணர்வடைகிறேன்-! நல்லது. 91. அவனை கவனியுங்கள். எப்படியாக அவர்கள், "நாம் எப்படி அதைப் பெறப் போகிறோம்-?' என்றார்கள். இப்பொழுது, தேவன் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தருளி, அவர்களை போஷித்தார். அவர் அப்படி போஷிக்கவில்லையா-? நிச்சயமாக அவர் செய்தார். அவர்கள் அதைப் பொறுக்கிக் கொண்டனர். நாம் அதைக் குறித்து தியானித்தோம். 92. இப்பொழுது, அது இன்றைய தினத்தில் நாம் போஷிக்கப்படுவதின் பரிபூரணமான முன்னடையாளமாக காணப்படுகிறது. அந்த மன்னா நின்று போகவில்லை. ஒவ்வொரு இரவும் அது விழுந்தது. எகிப்து தேசத்திற்கு வெளியே வாக்குத்தத்தத்தின் தேசம் வரையிலும் அவர்கள் யாத்திரையில் இருந்த காலம் முழுவதும் ஒவ்வொரு இரவும் அது விழுந்தது. பெந்தெகொஸ்தே நாளில், சீஷர்கள் எகிப்தை விட்டுவிட்ட உடனேயே பரிசுத்த ஆவி விழுந்தது, மன்னா வந்த அதே இடத்திலிருந்து, வானத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் வந்தார். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல், அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. அவர்கள் அங்கிருந்து சத்தமிட்டுக் கொண்டும், வெறித்த மனிதர்கள் போல நடந்து கொண்டும், நடனமாடிக் கொண்டும், தள்ளாடிக் கொண்டும். கத்திக் கொண்டும், உமிழ்நீர் வழிய மற்றும் இதைப் போன்ற காரியங்களோடும் வெளியே சென்றனர். வீட்டிற்கு வரும் ஒரு குடிகாரனை நீங்கள் கவனித்ததுண்டா-? "ஹலோ, அந்நியனே" என்று கூறிக் கொண்டே சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து செல்கிறான். எதுவும் அவனை தொல்லைக்குட்படுத்தவில்லை. 93. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை." ரோமர் 8:1. இங்கே அவர்கள் வருகிறார்கள், வீட்டிற்கு வருகிறார்கள். இப்பொழுது, பரிசுத்த ஆவியின் தாக்கத்தின் கீழ் தள்ளாடுகின்றனர். அது வானத்திலிருந்து வந்த தேவனுடைய மன்னாவாயிருக்கிறது. மேலும் அது, அந்நாள் துவங்கி இந்நாள் மட்டும் விழுந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு... அது என்னவென்று அறிவீர்களா-? ஒரு ஓமர் நிறைய வைக்கப்பட்டுள்ளது, உள்ளே போகும் ஒவ்வொரு ஆசாரியனும், அந்த அசலான மன்னாவிலிருந்து ஒரு வாய் நிறைய உட்கொள்ளுவான். 94. இந்த மன்னா எதுவரைக்கும் இருந்தது-? நேற்று இரவு இந்த பாடப்பொருளில் அது என்னவாய் இருந்தது என்பதன் மறுபரிசீலனையில் பார்க்கும் போது, பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி. ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாகி இருக்கிறது என்றான். அங்கே துவக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் என்னவாக இருந்தாரோ அதே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவும் அவ்வாறே இருக்கிறார். [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] நாம் அதை பெற்றுக் கொள்ள முடியுமா-? ஆம். ஐயா. 95. சபையானது காதேஸ்பர்னேயாவுக்கு வருகிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்-? அங்கே தான் நாம் இருக்கிறோம். அவர்கள் கூறினார்கள்... இப்பொழுது, ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், நீங்கள் ஒவ்வொருவரும் காதேஸில் இருக்கிறீர்கள், நாம் அங்கே வருகிறோம். 96. ஆனால் நீங்கள், "இப்பொழுது, நான் -- நான் அங்கே சென்று அவர்கள் சொல்கிறதான அந்த பரிசுத்த உருளை மார்க்கத்திலிருந்து சிலவற்றை நான் பெற நேர்ந்தால், என் தாயார் என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். என்கிறீர்கள். 97. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். காதேஸிலே. நீங்கள் அதைச் சுதந்தரிக்க முடியுமா-? முடியும். தேவன் அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். "பூமியிலே சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே கொண்டு வந்தேன். தகப்பனுக்கும், தாய்க்கும், புருஷனுக்கும், மனைவிக்கும், சகோதரனுக்கும், சகோதரிக்கும் மற்றும் அனைத்திற்கும் பிரிவுனை உண்டாக்க வந்தேன். தன்னைத் தான் வெறுத்து என்னைப் பின்பற்றாதவன், என்னுடையவன் என்று அழைக்கப்பட தகுதியற்றவன். கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தகுதியுள்ளவன் அல்ல."அது சரியே. 98. சகோதரனே. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஓடி பிரசங்கியாருடன் கைகுலுக்கி, உங்கள் மேல் சில தண்ணீர் துளிகள் தெளிக்கப்படுவதைக் காட்டிலும் இது மிகவும் அர்த்தம் வாய்ந்தது. அது சரியே. சகோதரனே, நீங்கள் பலிபீடத்திற்குச் சென்று இராப்போஜனம் எடுத்து, திரும்ப வந்து உங்கள் இருக்கையில் அமருவதைக் காட்டிலும் இது மிகவும் அர்த்தம் வாய்ந்தது. இது, விற்றுப் போவது, மரிப்பது என்பதாகும். ஒரு பண்டைய பாணியை, மரங்களுக்கிடையே, நீல வானத்தை, பாவத்தைக் கொல்லும் மார்க்கத்தை பொருள்படுகிறது, அது உங்களை வெண்மையாக கழுவுகிறது உங்களை வெள்ளை அடிப்பதல்ல, நீங்கள் வெண்மையாகும்படி உங்களை கழுவுகிறது. அல்லேலூயா, உங்களை சுத்தப்படுத்துகிறது, உங்களை சுட்டெரிக்கிறது. உங்களைத் தேய்த்து, உங்களை கிருமிகளற சுத்தப்படுத்தி உங்களை ஒரு புதிய மனுஷனாக்குகிறது, [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] ஆமென்-! அந்த சசாஃப்ராஸ் (sassafras) போன்று. சகோதரனே, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது உங்களுக்கு ஊட்டமளித்து நெஞ்சம் நிறையச் செய்யும். (It'll stick to your ribs.) அதைப் போன்ற சிலதை பெற்றுக் கொள்ளுங்கள். அது சரி. அது உங்களை சோதனையினூடாகத் தாங்கிக் கொள்ளும். ஆமென்-! எனக்கு உரக்க சத்தமிட வேண்டும் போல் தோன்றுகிறது. மிக அருகாமையில். அது சற்று மகத்தான ...ஆம் ஐயா. 99. நான் அதை எண்ணிப் பார்க்கும்போது, சகோதரனே, அது மிகவும் பாதுகாப்பானது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். நாம் அதைப் பெற இயலுமா-? நிச்சயமாக, நம்மால் அதைப் பெற முடியும். "கடைசி நாட்களில் நான் என் ஆவியை ஊற்றுவேன், அடையாளங்களையும் அதிசயங்களையும் நான் காட்டுவேன்." அல்லேலூயா-! தாம் அதைச் செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார். தேவன் அதை வாக்கு பண்ணினார். நாம் காதேஸில் இருக்கிறோம். நாம் போய் அதை பெற்றுக் கொள்வோம்-! யாரோ ஒருவர். அங்கே இருந்தவராய், அங்கிருந்து சில திராட்சைகளை கொண்டு வந்தார். அந்த தேசம் நல்லது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அது சரியே. நாம் போய் அவற்றில் சிலதை பெற்றுக் கொள்வோம். அது சரியே. 100. சபையானது முறுமுறுத்தல், முகம் சுளித்தல் மற்றும் அது போன்ற அனைத்தையும் செய்ய ஆரம்பிக்கிறது. அவர்கள் சற்றேனும் அவருக்கு செவி கொடுத்து இருந்து இருப்பார்களானால், பல வருடங்களுக்கு முன்பே அவர் சபையை அனுப்பி இருப்பார். ஆனால் அவர்களோ தர்க்கிக்கவும். அமளியில் ஈடுபடவும், முறுமுறுக்கவும் தொடங்கினர். 101. ஸ்பர்ஜன் (Spurgoen) நாட்களில் மெத்தடிஸ்ட் சபையானது பண்டைய - பாணியிலான எழுப்புதலைப் பெற்றிருந்தது. [திரு. சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் என்பவர் 18-ஆம் நூற்றாண்டில் பிரசங்கிகளின் இளவரசன் என்று அழைக்கப்பட்டார் - மொழிபெயர்ப்பாளர்] அவர்கள் வரங்களையும் அது போன்ற காரியங்களையும் பெறத் துவங்கினர். சபையானது சரியாக அந்த இடத்தை அடைந்து. பின்னர் அந்த காரியங்களை சிதைக்கத் தொடங்கி (tear), பின்னர் அப்பொழுதிலிருந்து சபையானது வனாந்திரத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. அலைந்து கொண்டிருக்கிறது. அது நசரீன்களாகவும், யாத்ரீக பரிசுத்தர்களாகவும். இதுவாகவும், அதுவாகவும், இது மற்றும் அதுவாகவும், வேறேதோவாகவும் மற்றும் இன்னும் எல்லாவுமாகவும், இப்பொழுது வரை அது என்னவென்று தெரியாத ஒரு பெரிய கூட்டமாக மாறி, அப்படியாக அது உடைந்து போனது. அது உண்மை. அவர்கள் பெரிய பள்ளிகளை நிறுவினர், குறிப்பிட்ட இடத்தின் இறையியல் படிப்பை போதிக்கலாம் எண்ணினர். 102. நான் கடந்த இரவில் கூறினது போன்று. ஒரு சவக்கிடங்கின் பொறுப்பாளரின் மனப்பான்மையில் அது என்னை வைக்கிறது. அங்கே சென்று பாருங்கள். அதிகமான குளிர்-! ஒரு ஆவிக்குரிய வெப்பமானியை உள்ளே கொண்டு செல்லுங்கள், அது பூஜ்யத்திற்குக் கீழ் நூறு என்று காண்பிக்கும். 103. சில நாட்களுக்கு முன்பு, ஒருவர், ஒரு நாட்டுப்புறத்திலிருந்து ஒரு சிறிய வயதான பெண்மணி, அவள் உள்ளே வந்தாள், தன்னுடைய நீண்ட அங்கியை உடுத்தியவாறு, கழுத்தைச் சுற்றி இது வரைக்குமாக இருக்கும்படி அணிந்திருந்தாள். அவள் உள்ளே சென்றாள். அவளுடைய மகன் அவளை அந்த சபைக்கு அழைத்து வந்திருந்தான். அவளைக் குறித்து அவன் வெட்கப்பட்டான். அவள் கதவருகே சென்று, காலை வணக்கம், மூப்பரே" என்றாள். இந்த விதமாக உள்ளே நடந்து சென்றாள். 104. அவளுடைய கணவன், அல்லது அவளது சகோதரர்கள் அல்லது அவளது மகன், அம்மா-! அம்மா நீங்கள் அமைதியாக இருங்கள்" என்றான். அவன் போய்விட்டான், ஏதோ ஒரு பெரிய உயரிய சபையைச் சார்ந்தவன். 105. அவள், "நல்லது, தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்-! நான் தேவனுடைய வீட்டில் இல்லையா-?' என்றாள். அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. 106. நான் இதை உங்களுக்கு கூறட்டும், சகோதரனே. அவளது பெயர் 'யார்-யார்' பதிப்பில் இல்லாமலிருக்கலாம். அவர்களில் அநேகர் அதில் உள்ளனர், சரியாக நானூறு பேர்கள் இடம் பெற்றிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். (Who's Who, யார்-யார் பதிப்பில் குறிப்பிடத்தக்க நபர்களைப் பற்றின காரியங்கள் இடம் பெற்றிருக்கும், அந்த பதிப்பில் தாங்கள் இடம் பெறுவதைக் குறித்து ஜனங்கள் உயர்வாக கருதுவார்கள் மொழிபெயர்ப்பாளர்.) ஆனால், அவளது பெயர் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 'யார்-யார்' பதிப்பில் எனது பெயர் இடம் பெறுவதைக் காட்டிலும், அதிலே இடம் பெறுவதையே விரும்புவேன். அல்லேலூயா-! அதுவே யார் யார் என்று, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர்கள் யார் யார் என்று கூறுகிறது. 107. அவள் உள்ளே சென்று, இந்த விதமாக உட்கார்ந்தாள். பிரசங்கியார், "இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவியை இரட்சிக்கும்படியாக பூமிக்கு வந்தார்" என்று சொல்ல ஆரம்பித்தார். 108. அப்பொழுது அவள், "ஆமென்-! தேவனுக்கு மகிமை-! அது சரி தான் சகோதரனே" என்றாள். உடனே அனைவரும் சட்றென்று வாத்தைப் போல தங்கள் கழுத்தை திருப்பி, சுற்றிப் பார்த்து, என்னவென்று வியந்தார்கள். 109. அப்பொழுது அவர், "ம்-ஹும், ம்-ஹூம்" என்றார். அவர் குறிப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா-? எனவே, அவர் ஒருவித குழப்ப நிலைக்குள்ளாகி,"ம்-ஹூம், ம்-ஹூம், என்னை மன்னியுங்கள் என்றார். மேலும், "நான் கூறிக் கொண்டிருந்தது போல, கர்த்தராகிய இயேசு பூமிக்கு வந்தார்' என்றார். அவள். "தேவனுக்கு மகிமை-! அது சரி தான் சகோதரனே. அல்லேலூயா-!" என்றாள். 110. அப்பொழுது வாயிற்காப்பாளர் சென்று அவளுடைய தோளைத் தட்டி, "அம்மையாரே, நீங்கள் அமைதி காக்க வேண்டும் இல்லையேல் நாங்கள் உங்களை வெளியே அனுப்ப நேரிடும்" என்றார்கள். ஒ.என்னே-! அல்லேலூயா-! 111. அதற்குள்ளே தான் நாம் பிரவேசித்திருக்கிறோம். அது சரியே, தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கூடங்கள். நாம் ஆசிரியர்களை எழுப்பி அவர்களை தக்க வைத்துக் கொள்ள பிணத்தை பதனிடும் திரவத்தை (embalming fluid) அவர்களுக்குள் செலுத்துகிறோம். எப்படி ஆயினும், அவர்கள் மரித்தவர்களே. "அற்புதத்தின் நாட்கள் கடந்து விட்டது. இதயப்பூர்வமான மார்க்கத்தைப் போல அப்படிப்பட்ட எந்த காரியமும் இல்லை" என்பது போன்ற சில இறையியல் காரியங்களை போதிப்பதற்கு அவர்களை மரித்த நிலையிலேயே வைத்து இருக்கும்படி, பிணப்பதனிடும் திரவத்தை அவர்களுக்குள் செலுத்துகிறோம். 112. தெற்கிலே ஒரு வயதான கறுப்பினத்தவரை என் சிந்தையில் அது கொண்டு வருகிறது. அவர் தன்னுடைய வேதாகமத்தை அரவணைத்து பிடித்திருந்தார். "எதற்காக நீங்கள் வேதாகமத்தை கொண்டு செல்கிறீர்கள்-?' என்று கேட்கப்பட்டது. அவர், 'நான் அதை விசுவாசிக்கிறேன்" என்றார். "ஆனால் உங்களால் அதில் ஒரு வார்த்தையைக் கூட வாசிக்கத் தெரியாதே-?" அதற்கு அவர். "எப்படியாயினும் நான் அதை விசுவாசிக்கிறேன்" என்றார். மேலும் அவர், "அட்டைப்பக்கம் முதல் அட்டை பக்கம் வரை நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அட்டைப் பக்கத்தையும் கூட விசுவாசிக்கிறேன்" என்றார். ''உங்களுக்கு எப்படி தெரியும்-?" அதற்கு அவர், "அதன் மேல் பரிசுத்த வேதாகமம்' என்று எழுதப்பட்டுள்ளது" என்றார். ஆம், ஐயா. அவர் அதை விசுவாசித்தார். எப்படியோ அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. "நீங்கள் என்ன செய்வீர்கள்-? அந்த வேதாகமத்தில் உள்ள எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்வீர்களா-?" "கர்த்தர் என்னை எதைச் செய்ய சொன்னாலும் அதைச் செய்வேன்" என்றார். "அவர் உங்களை இந்த சுவற்றின் ஊடாக குதிக்கச் சொன்னால்-?" "நான் குதிப்பேன்" என்றார். உங்களால் இந்த ஓட்டை இல்லாத சுவற்றின் ஊடாக நடக்க முடியும் என்று நினைக்கிறீர்களா-?" 113. அதற்கு அவர், “கர்த்தர் என்னை குதிக்கச் சொன்னால், அவர் அதில் ஓட்டையை எனக்காக உண்டு பண்ணுவார்" என்றார். சகோதரனே அது மிகவும் சரியே. அல்லேலூயா-! அது சத்தியம். (சகோதரன் பிரன்ஹாம் பீடத்தை பலமுறை தட்டுகிறார் - மொழிபெயர்ப்பாளர்] தேவன் உங்களை குதிக்கச் சொன்னால், நீங்கள் குதித்து, அந்த இடத்தை அடையும் அடையும் போது அவர் ஒரு துளையை உண்டு பண்ணுவார். அதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். (சபையார் ஆர்ப்பரிக்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்] 114. பாடசாலை வேதாகமப் படிப்பு-! ஓ. என்னே-! அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா-? அந்த இடத்திலே, மேலறையில் அவர்கள் இரவு உணவிற்காக ஆயத்தம் செய்து. சேவலை சமைத்து. ஒரு பிளேட்டிற்கு ஐம்பது சென்ட் என விலை நிர்ணயம் செய்து. அதனைக் கொண்டு பிரசங்கியாருக்கு காணிக்கை கொடுக்க முற்பட்டனர். தசமபாகத்தையும், தேவன் உங்களை செய்யும்படியாய் சொன்னதையும் நீங்கள் சரிவர செய்தால், இரவு உணவு சூப் போன்றவற்றை நீங்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆமென். [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] அதிலே அபிஷேக எண்ணெய் கூட கொதித்தது. [சபையார் சிரிக்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்.] சகோதரனே, நான் ஒன்றை உங்களுக்குக் கூறட்டும். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் அடிப்படையில், தேவனுடைய தெய்வீக சித்தத்தில் செயல்படுகிற ஒர் சபையையே தேவன் விரும்புகிறார். ஆம். ஐயா. மேலறையில் காத்திருக்கும் அனைத்து காரியங்களையும் அவர்கள் நீக்கி விட்டார்கள். பரிசுத்த ஆவிக்காக அவர்கள் என்ன செய்தார்களோ, அதற்குப் பதிலாக இவர்கள் இறையியல் படிப்பை வைத்து விட்டனர். யாரோ ஒருவர் வெளியே சென்று, "நல்லது, நாங்கள் இதை விசுவாசிக்கிறோம். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்" என்கிறார். நீங்கள் ஏன் அதை விசுவாசிக்கின்றீர்கள்-? அது வேதாகமத்தில் இல்லையே, அதைக் குறித்து ஒன்றுமே இல்லை. 115. யாரோ ஒருவர், "அன்றொரு நாள் ஒரு ஸ்திரீயுடன் ஓடிப் போய் அவளைத் திருமணம் செய்து கொண்ட அந்த பாதிரியாரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-?' என்று கேட்டார். அதற்கு நான், "நீங்கள் அதைக் குறித்து வேதத்தில் காண முடியாது. அதைச் செய்ய அவருக்கு உரிமை உண்டு. என்னைப் போல அல்லது மற்றெவரைப் போல, அவரும் திருமணம் செய்ய கொள்ள அவருக்கு அவ்வளவு உரிமை உண்டு" என்றேன். ஒரு கத்தோலிக்க பையன் என்னிடம், "பில்லி, அது சரியானதா-?" என்று கேட்டார். நான், "அது சத்தியம்" என்றேன். அதற்கு அவர், "எனக்கு காண்பியுங்கள்" என்றார். 116. அப்பொழுது நான், "நல்லது. வேதத்தில் நான் அதைக் காண்பிக்கிறேன். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்] அல்லேலூயா-! பவுலும் கூட. அவனவன் தன் சொந்த மனைவியையும்' என்று குறிப்பிடுகிறானே. அது மிகவும் சரியானது தான்" என்றேன். "அது ஒரு ஒரு ரோமனுடைய கலாச்சாரம். அடித்தளமில்லாத பாதாளம் அங்கே இருக்கிறது என்பதை காட்டிலும் அதிக ஆணித்தரமான சத்தியம் அதில் ஒன்றுமில்லை" என்றேன். அல்லேலூயா-! நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். நான் ஏதோவொன்றை விசுவாசிக்க வேண்டியவனாய் இருக்கிறேன், மேலும் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்-! 117. ஒரு முறை பழைய ஏற்பாட்டிலே ஒரு கூட்ட பிரசங்கிமார்கள் காணப்பட்டார்கள். அவர்களுக்கு அநேக காரியங்கள் போதிக்கப்பட்டிருந்தன. அவர்கள் என்ன என்னவகையான கல்வியை உடையவர்களாய் இருந்தனர் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். அவர்கள் அவர்களுக்கு அந்நாளுக்குரிய தீர்க்கதரிசிகள் பள்ளிகளின் இறையியல் கல்வியை படிப்பித்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அவர்கள் ஒரு அசலான தீர்க்கதரிசியை வந்து பார்க்க நேரிட்டது. அந்த தீர்க்கதரிசி அவர்களில் ஒருவனை நோக்கி, "நீ போய், ஒரு மடி நிறைய - ஒரு கூழ்ப்பானை நிறைய பறித்து கொண்டுவா, நாம் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து, பெரிய அளவில் சிறுபயிற்று கூழை நாம் அங்கே சமைப்போம்" என்றான். 118. அந்த பிரசங்கியார் என்ன செய்தான் தெரியுமா-? அவன் சென்று பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு. அதன் காய்களை மடி நிறைய அறுத்து வந்தான். பையனே, சிறுபயிற்றுக்கும் பேய்க்கொம்மட்டிக் காய்க்கும் வித்தியாசம் தெரியாத ஒருவன். அவன் ஒரு பிரசங்கியார். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அவன் அவைகளை பானையிலே போட்டு சமைக்க ஆரம்பித்தான். முதலாவது காரியம் என்னவென்றால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தட்டு நிறைய அதை பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அவர்கள், ''பானையில் சாவு இருக்கிறது" என்றார்கள். 119. அது தான் இன்றைக்குள்ள காரியமும் கூட, பானையில் சாவு இருக்கிறது-! பழைய குளிர்ந்து போன பாட சாலை, சம்பிரதாயங்கள், தேவனற்ற இடங்களில் நடை பெறுகிறவைகள், ஏதோ இறையியல் பாடத்தை கற்பிக்க முயற்சி செய்வது போன்ற இவைகள்-! அவர்கள் ஜனங்கள் மத்தியில் பிரிவினையுண்டாக்கி, அவர்களை கிறிஸ்துவை விட்டு தூரமாக கொண்டு செல்கின்றனர். ஜீவனை அருளுவதற்கு நமக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தேவையாய் இருக்கிறது. அல்லேலூயா-! வ்யூ [சபையார் 'ஆமென்' என்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்.] இப்பொழுது நான் என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை (I feel about twice my size now). ஆனால் அது சத்தியமாகும். சகோதரனே. நீங்கள் வேறு ஏதோவொன்றை சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எதை சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்-? அது அடுத்த காரியம். ஆனால் சிறுபயிற்றுக்கும் பேய்க் கொம்மட்டிக் காய்க்கும் வித்தியாசம் தெரியாத ஒருவன்-! [சபையார் சிரிக்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்.] அவனும் இவர்களில் ஒருவனைப் போல இருக்கிறான். (அவனும் இவர்களில் ஒருவனைப் போல இருக்கிறான் என்பதை சகோ.பிரன்ஹாம் சிரித்துக் கொண்டே கூறுகிறார் - மொழிபெயர்ப்பாளர்.) அது சத்தியம்.ஆம் ஐயா. "பானையில் சாவு இருக்கிறது" என்று சொல்லப்பட்டது. 120. எலிசா ஒரு அசலான தீர்க்கதரிசியாய் இருந்தான். அவன், “ஓ, அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். எல்லாரையும் கலக்கமடையச் செய்ய வேண்டாம்" என்றான். ஆமென். இரட்டிப்பானதைப் பெற்றுக் கொண்ட ஒரு நபர் நமக்கு இங்கே உண்டு. (சபையார் 'ஆமென்' என்கின்றனர், சகோ.பிரன்ஹாம் மேசையைத் தட்டுகிறார்-மொழிபெயர்ப்பாளர்.] அல்லேலூயா-! அவன் அங்கே கானான் தேசத்திலே இருந்தவனாய் காணப்பட்டு திரும்ப வந்தவனாய். ஒரு இரட்டிப்பான காரியத்தை உடையவனாய் இருக்கிறான். தொல்லை நேரிடும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். "போய், ஒரு கை நிறைய மாவை என்னிடம் கொண்டு வா" என்றான். அவன் அந்த மாவை எடுத்து பானையில் போட்டான். "இப்பொழுது, வேண்டியவர்கள் யாவரும் புசிக்கலாம். இப்பொழுது அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்றான். 121. அது ஏன் மாவாக இருக்க வேண்டியிருந்தது-? அது அங்கே அசைவாட்டுதலுக்காக இருந்தது, போஜனபலிக்காக கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலிக்காக இருந்தது. அந்த மாவானது இயந்திரத்தில் அரைக்கப்பட வேண்டியதாய் இருந்தது, அதன் ஒவ்வொரு பயிறும் ஒன்று போல் அரைபட வேண்டியிருந்தது. அந்த போஜன பலி கிறிஸ்துவே. கிறிஸ்துவை உள்ளே வையுங்கள், ஒவ்வொரு அரவைக்கல்லும் அதையே அரைத்தது. (every bur ground the same) இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எப்பொழுதெல்லாம் பானையில் சாவு இருக்கிறதோ, அதன் உள்ளே கிறிஸ்துவை வையுங்கள். அல்லேலூயா. வ்யூ-! மகிமை-! அல்லேலூயா-! [சபையார் ஆர்ப்பரிக்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்.] 122. நான் முதலாவதாக, பரிசுத்த ஆவியுடன் காணப்பட்ட ஒருவரை கண்டேன். அவர் ஒரு பெரிய நீண்ட அங்கியை உடுத்தியிருந்த ஒரு வயதான கருப்பின மனிதன் ஆவார். அவர் மிகவும் வயதானவராக இருந்தபடியினால் அவர்கள் அவருக்கு இந்த விதமான உதவி செய்ய வேண்டியிருந்தது. அவர் அங்கே எழுந்து நின்று, ஓ, இந்த பூமியின் மீது சம்பவித்தது என்ன என்பதைக் குறித்து பிரசங்கிக்க ஆரம்பித்தார். அவர் யோபிலிருந்து தன்னுடைய பாடத்தை எடுத்தார். "நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ எங்கேயிருந்தாய்-? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே." அவர், "நாம் ஒருவகையான ஒரு புது வகையான மார்க்கத்தை பெற்றிருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சகோதரனே, நான் ஒரு பண்டைய காலத்து விஷயத்தை, அல்லது பண்டைய காலத்து மார்க்கத்தினுடைய புத்தம் புதிய பதிப்பை பெற்றுக் கொண்டேன்" என்றார். சிறிது நேரத்திற்கு பின்னர், பரிசுத்த ஆவியானவர் அவரை பற்றிக் கொண்டார். எளிமையான வயதான நபர் மிகவும் ஸ்திரமுடையவராய் அங்கே நின்று கொண்டிருந்தார்; அவர் தன்னை நேரே நிமிர்த்திக் கொண்டு, தன்னுடைய குதிகால்களை உதைத்து கொண்டு, ''மகிமை-! அல்லேலூயா-!" என்றார். மேலும், "நான் பிரசங்கிப்பதற்கு ஏற்ற போதுமான இடத்தை நீங்கள் பெற்றிருக்கவில்லை என்று கூறி மேடையை விட்டு வெளியே நடந்தார். 123. அப்பொழுது நான்: சகோதரனே, ஒரு 80 வயது மனிதனுக்கு அது அவ்விதம் செய்யுமானால். (சகோ.பிரன்ஹாம் மேசையைத் தட்டுகிறார் மொழி பெயர்ப்பாளர்.] எனக்கு அது எப்படிப்பட்ட காரியத்தைச் செய்யும்-? எனக்கு அது வேண்டும் என்றேன். அல்லேலூயா-! சரியா-? [சபையார் 'ஆம், ஐயா' என்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்.] ஆம் ஐயா.நான் ஒரு மகத்தான் நேரத்தை உடையவனாய் இருந்தேன். சரியாக ஒரு சோளக்காட்டிற்குள் சென்று, என்னுடைய பெலவீனமான (rusty knees) முழங்காலில் நின்று அதற்காக நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அது சரியே. 124. வயதான அந்த ராபின்சனைப் போல, அவர் பரிசுத்த ஆவியை நாடினவராய் போய்க் கொண்டிருந்தார். "தேவனுக்கு மகிமை-! எனக்குப் பரிசுத்த ஆவி அவ்வளவாய் தேவைப்பட்டது. நான் என்ன செய்ய வேண்டுமென்பதை அறியாதவனாய் இருந்தேன்" என்றார். மேலும் அவர், "ஒரு நாள் காலை வேளையில் வயதான அலெக்-உடன் (அவருடைய கழுதை) சோளம் உழுது கொண்டிருந்தேன். அது சோளத்தை மிதித்தவாறு நடந்து கொண்டிருந்தது. நான் அதன் மேல் கோபமுற்று, அதனிடன் ஓடிச் சென்று, என்னால் முடிந்த வரை அதன் காதைக் கடித்து விட்டேன். அலெக் என்னை உதைத்து விட்டது. நான் அங்கே சென்று உட்கார்ந்து விட்டேன். நான் அதை நோக்கிப் பார்த்தேன், அது அங்கே நின்று கொண்டிருந்தது. என்னால் முடிந்த வரை நான் அதைக் கடித்து விட்டேன். நான் அதனை நோக்கிப் பார்த்து 'அலெக்' என்றேன். மேலும், அலெக், என்னை மன்னித்து விடு, இனிமேல் நான் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்' என்றேன். அலெக் சுற்று முற்றும் பார்த்து: 'இப்பொழுது நீ பெற்றிருக்கும் மார்க்கத்தை விட பெரிதாக ஒன்றும் பெற்றுவிட போவதில்லை. இல்லாவிட்டால், மீண்டும் இதேபோல நீ என்னை நடத்தத்தான் போகிறாய்' என்றது" என்று கூறினார். என்னே-! என்னே-! அது சரி தான். மேலும் அவர், "நான் அந்த சோள பாத்தியில் இறங்கி: நல்ல கர்த்தாவே, என் ஆத்துமாவின் முடிவினுடைய விளிம்பைப் பற்றியதான அதிகமான அறிவை எனக்குத் தந்தருளும். எனது வாயில் பற்கள் இருக்கும் வரை பிசாசோடு சண்டையிட எனக்கு உதவியருளும், பின்னர் நான் மரிக்கும் வரை அவனை கடித்துக் கொண்டே இருப்பேன். (சகோ.பிரன்ஹாம் மற்றும் சபையார் சிரிக்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்.) கர்த்தாவே, நீர் எனக்கு பரிசுத்த ஆவியை தராவிடில், நீர் இந்த பூமிக்குத் திரும்ப வரும்போது சரியாக இங்கே ஒரு எலும்புக் குவியலைத் தான் காண்பீர் என்றேன்" என்று கூறினார். அவர் அதைப் பெற்றுக் கொண்டார். ஆமென். [சபையார் 'ஆமென்' என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்.] அது சரியே. 125. நீங்கள் கீழிறங்கி, மெய்யாகவே அந்த அர்த்தத்தில் தேவனுக்கு முன்பாக வருவீர்களானால், அப்பொழுது தேவன் உங்களை முழுவதுமாக அங்கே கொண்டு செல்வார். வேத பாடசாலை பிரசங்கிமார்கள் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, நம்மால் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் தேவன் அதை நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். 126. அங்கே தான் காலேப் தன்னுடைய விசுவாசத்தை அடித்தளம் அடித்தளமிட்டான். அங்கே தான் யோசுவா அதை அடித்தளமிட்டான், ஏனெனில் தேவன், ‘இது உங்களுக்கானது, நான் அதை ஏற்கெனவே உங்களுக்கு கொடுத்து விட்டேன்'' என்றார். அல்லேலூயா-! நான் அதை விரும்புகிறேன். "நான் பெறுவேன்' என்றல்ல. "நான் பெற்றிருக்கிறேன்-!” 127. எவர்களை அழைத்தாரோ. அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். அது சரிதானே-? மேலும், எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார். அது சரிதானே-? அப்படியானால், சகோதரனே, பரலோகத்தில் நாம் ஏற்கெனவே கிறிஸ்து இயேசுவுடன் கூட மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா-! அது சரியே. பிசாசு வீறிட்டு, கூக்குரலிட்டு, அவனுக்கு வேண்டியபடி தனது எல்லாவிதமான கோபத்தின் வெளிப்பாட்டையும் பெற்றுக் கொள்ளட்டும். கர்த்தர் உரைக்கிறதாவது-! அது சரியே. ஓ. என்னே-! 128. நாம் இங்கே எங்காவது ஓரிடத்திற்கு வருவோம், அதை விட்டு சற்று வெளியே வரும் வகையில் பிரசங்கிக்கத் தக்கதான ஏதாவது ஓரிடத்திற்கு நாம் செல்லுவோம். ஓ எவ்வளவு அற்புதமாயுள்ளது-! அதற்கு பின்பு அவர்கள் முறுமுறுக்க வேண்டியிருந்தது, கலகம் செய்தல். நாம் 21-ம் அதிகாரத்திற்குச் சென்று, 5-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். அங்கே அவர்கள் முறுமுறுத்து, கலகம் பண்ணி, அவபக்திக்குரிய செயலை செய்ய வேண்டியிருந்தது. (carrying on activity that is not honest or moral மொழி பெயர்ப்பாளர்.) தண்ணீர் விநியோகத்தை நிறுத்துங்கள். ஒரு வேளை இன்றிரவு சபையைப் பற்றியதான காரியம் கூட அதுவாகத்தான் இருக்கும். அதிகப்படியான கலகமும், முறுமுறுப்பும் செய்தல். தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 129. நான் நான் பலமுறை உலகமுழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். மிகவும் ஒட்டிக் கொள்ளுகிற அல்லது கீழே படுப்பதற்கு மிகவும் மோசமான பகுதிகளில் ஒன்று பாலைவனமாகும். அங்குள்ள ஒவ்வொன்றின் மேலும் பசை உள்ளது போல் இருக்கும். ஏன் தெரியுமா-? ஒவ்வொரு சிறு களையும் கூட கள்ளிச்செடி வகையைச் சார்ந்தது. எங்கேயும் நீங்கள் படுத்துக் கொள்ள முடியாது. உங்கள் மீது அது ஒட்டிக் கொள்ளும். அதன் காரணம் என்னவெனில், அங்கே தண்ணீர் இல்லை. தண்ணீரானது அதை மென்மையாக்குகிறது. மிக அதிகப்படியான தண்ணீர் இருக்கும் இடங்களில், முட்களோ நெருஞ்சிலோ காணப்படாது; தண்ணீர் அதிகமாக இருக்கும் இடங்களில். 130. மேலும். நான் உங்களுக்கு சொல்லுகிறேன். சகோதரனே, தன் எலும்பில் உலர்ந்து போன ஒரு சபையை எடுத்துக் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவி இல்லாத, இரட்சிப்பு இல்லாத, தெய்வீக சுகமளித்தல் இல்லாத, தேவனுடைய வல்லமை இல்லாத, சத்தமிடாத, களிகூராத ஒரு சபையை எடுத்துக் கொள்ளுங்கள், அது எப்பொழுதும்,"இதை, ஓ, அவள் இதைச் செய்தாள். அவன் இதைச் செய்தான், மேலும் அவன் இதைச் செய்தான்" என்கிறது. ஒட்டிக்கொள்வது, ஒட்டிக்கொள்வது. ஒட்டிக்கொள்வது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பண்டைய-பாணியிலான ஊற்றப்படுதல், பரிசுத்த ஆவியின் பொங்குதலேயாகும். அல்லேலூயா-! இன்னும் சற்று மென்மையாகுதல். ஆமென்-! அதன் அர்த்தமானது, "அப்படியே ஆகக்கடவது.' பிரன்ஹாம் கூடாரத்திற்கும் கூட ஒரு நல்ல அளவில் அது தேவைப்படுகிறது. அது சரிதான். ஓ, அது சரி தானே-? ஆமென்-! ஓ, நான் இங்கே ஒரு அருமையான நேரத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கிறேன். சகோதரன் ஹிக்கின்பாதம் அவர்களே, (Brother Higginbotham) என்னுடைய உடை எனக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆம், ஐயா. என்னுடைய சட்டையின் கழுத்துப் பட்டையானது பெரியதாக இல்லை. என்னுடைய சட்டை சரியாகப் பொருந்துகிறது. அருமையாக உணர்கிறேன். என் மனைவி கூட இங்கே இல்லை. (சபையார் சிரிக்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்] எனவே என்னால் என்னால் ஒரு மகிமையான நேரத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஓ, நீங்கள் அவளிடம் சொல்ல வேண்டாம். வேண்டாம். நல்லது, ஆனால், நான் ஒரு அருமையான நேரத்தைப் பெற்றிருக்கிறேன்-! நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா-?" என்று கேட்கிறீர்கள். 131. நிச்சயமாகவே. நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் எதை அறிந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதையும், சந்தோஷமாக இருப்பதையும் விட்டு நான் எப்படி விலகியிருக்க முடியும்-? ஆமென். கிறிஸ்து என்னை இரட்சித்தார், பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பினார், பரலோகத்திற்கான நுழைவுச்சீட்டை எனக்குக் கொடுத்தார். நான் மகத்தான நேரத்தை உடையவனாய் இருக்கிறேன். "நீங்கள் எல்லாரும் வாருங்கள்" என்று கூறி தொடர்ந்து செல்கிறேன், ஆம்,ஐயா. 132. ஒரு கோழியை அடை வைத்த ஒருவனை நான் நினைவு கூறுகிறேன். அந்த கோழிக்கு... அவனுக்கு அடை வைக்க போதுமான முட்டைகள் இருந்தும் ஒரு முட்டை குறைவாக இருந்தது. அந்த ஒரு முட்டைக்கு நான் என்ன செய்வது-? என்று நினைத்தவனாய், அவன் வெளியே சென்று ஒரு வாத்து முட்டையைக் கண்டு அதை கோழியின் அடியில் வைத்து விட்டான். 133. அந்தக் கோழி அனைத்து முட்டைகளையும் பொரித்தது, வாத்தையும் பொரித்தது. அவைகள் அந்த கொட்டகையில் ஒன்றாக நடந்து சென்றன. அந்த சிறிய வாத்து தனது இடத்தை விட்டு வெளியே பார்க்கவில்லை பரிசுத்த உருளையாகிய உங்களில் ஒருவனைப் போல. "க்வாக் - க்வாக், க்வாக் - க்வாக்' என்று இந்த விதமாக அது சுற்றிலும் நடந்தது. ஓ, அவைகள் அந்த கொட்டகைக்கு பின்னால் வெளியே செல்லும், அப்பொழுது அந்த கோழி ஒரு வெட்டுக் கிளியைப் பிடித்துவிடும். ''க்வாக் - க்வாக் கவாக் -கவாக். இங்கே கோழி 'க்ளக்-க்ளக், க்ளக் - களக்' என்று அழைக்கும். அந்த கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றுமே அதனிடம் இந்த விதமாக ஓடி வரும். ஆனால் அந்த சிறு வாத்திற்கு அந்த அழைப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாது. “க்வாக்-க்வாக். அதன் நாசியில் ஏறுகிற இந்த தூசுகள் மற்றும் அதைப் போன்ற எதைப் பற்றியும் அதற்கு ஒன்றும் தெரியாது. அது வெறுமனே தனது இடத்தை விட்டு வெளியே வந்த ஒரு வேடிக்கையான சிறிய தோற்றமுடைய ஒன்றாயிருந்தது. 134. ஒரு நல்ல பண்டைய-பாணியிலான பரிசுத்த ஆவியையுடைய நபர், ஒரு பழைய குளிர்ந்து போன பாரம்பரிய சபையில் இருப்பது போல், தனது இடத்தை விட்டு வெளியே வந்த ஒருவனைப் போல. இதைக் குறித்து, அதைக் குறித்து, மற்ற அனைத்தையும் குறித்து, யார் தலைவர் என்பவைகளையெல்லாம் குறித்து பேசுதல். அவர்கள் அறிய வேண்டியதோ யார் தேவன் என்பதே, அவர்கள் தேவனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 135. ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அந்த வயதான கோழி ஒரு நாள் ஒரு தவறைச் செய்து விட்டது. சரியாக அந்த பழைய சபை செய்ததைப் போன்று. அது சரியே. ஒரு நாள் அந்த சிறு வாத்து, அவைகள் செல்வதைப் போலவே கொட்டகைக்குப் பின்னால் சென்றது. சிறிது நேரத்தில் அந்த சிறிய வாத்து தனது தலையை மேலே உயர்த்தி, முகர்ந்து, முகர்ந்து, முகர்ந்து. முகர்ந்து, அது தண்ணீரை முகர்ந்தது. உங்களுக்குத் தெரியுமே, அதனுடைய சுபாவமே அது தான். ஆமென். அது தண்ணீரின் வாசனையை முகர்ந்தது. அது, "ஹாங்க்- ஹாங்க், ஹாங்க் - ஹாங்க்" என்றது. ஓ, என்னே-! அது இயற்கையில் ஒரு கோழிக் குஞ்சு அல்ல, எப்படியோ அது இயற்கையிலேயே ஒரு வாத்தாக இருந்தது. எனவே அது தண்ணீரின் வாசனையை முகர்ந்தது. அங்கே ஒரு சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த வயதான கோழி, "க்ளக்-க்ளக், களக் - களக், களக்-!" என்று சத்தமிட்டது. அதுவோ, "ஹாங்க்-ஹாங்க் ஹாங்க்-ஹாங்க்" என்று சத்தமிட்டு தன்னால் முடிந்த வரை முழுபலத்தோடும் தண்ணீருக்குள் நேராக சென்றது. 136. அந்த விதமாகத்தான், தேவனுடைய இராஜ்யத்தில் பிறக்கின்ற ஒரு மனிதனுடைய வழியும் இருக்கும். அந்த பாரம்பரிய சபை, 'அந்த பரிசுத்த உருளைகளை விட்டு வெளியே வா, அது அர்த்தமற்றது, அது இது தான், அல்லது அது தான்" என்று சொல்லக் கூடும். "ஹாங்க் - ஹாங்க் ஹாங்க், அவன் தண்ணீருக்குள் செல்ல வேண்டியவனாயிருக்கிறான்-! அல்லேலூயா. 137. மகிமை-! விசுவாசமுள்ளவனாகி, ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்." தேவனுக்கு மகிமை-! நீங்கள் அதைப் பைத்தியம் என்று கூறுகிறீர்கள்; ஆனால், சகோதரனே, நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம்-! 138. “ஹாங்க்-ஹாங்க் ஹாங்க் - ஹாங்க் ஹாங்க் - ஹாங்க்." அந்த சிறிய வாத்துக்கள் தண்ணீரை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன. அது என்ன-? அது அதனுடைய சுபாவமே ஆகும். அதற்கு வாத்து உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்குள்ளேயே இருக்கிற ஏதோ ஒன்று அதனை தண்ணீரிடம் அழைத்துச் செல்கிறது. 139. அப்படியே தேவன் ஒரு இருதயத்திற்குள்ளே இருக்கும்பொழுது, அவர் உங்களை ஒரு பண்டைய- பாணியிலான பரிசுத்த ஆவி கூட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்வார். தேவனுக்கு மகிமை-! மகிமை-! அது சரியே, சகோதரனே, அது என்னுடைய சுபாவம் என்று எனக்குத் தெரியும். அல்லேலூயா-! உங்களுடைய சுபாவம் மாறாதிருக்கும் வரை, நீங்கள் அந்த வயதான கோழியின் 'க்ளக்'-கிற்கே செவி கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், நீங்கள் தண்ணீரின் வாசனையை முகரும் போது, நீங்கள் மாத்திரம் ஒரு வாத்தாக இருப்பீர்களானால், உங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை [சபையார் சிரிக்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்], [Gone Gosling is American slang for a person or thing beyond hope or help] ஏனென்றால், நீங்கள் தண்ணீரை எதிர்நோக்கி இருக்கிறீர்கள். அல்லேலூயா-! 140. யோசுவா, “ஆ. நம்மால் சுதந்தரிக்க முடியும்" என்றான். யோசுவா,"நம்மால் சுதந்தரிக்க முடியும்" என்றான்.காலேப், "நம்மால் சுதந்தரிக்க முடியும்" என்றான். "நம்மால் சுதந்தரிக்க முடியும் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்-?" 141. அதற்கு அவன், "ஏனென்றால், தேவன் அவ்வாறு கூறினார், நாங்கள் போகிறோம். நாம் அதை சுதந்தரிக்க போகிறோம், நாம் அதை செய்யப் போகிறோம்" என்றான். அங்கே அவர்கள் சென்றார்கள்-! அந்த தேசத்திற்குள் சென்று, பரிசுத்த ஆவியின் அத்தாட்சியைப் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதை நிரூபிக்க அவர்கள் திரும்பி வந்தார்கள். அது நல்ல தேசமாயிருந்தது. அது நல்ல திராட்சைப் பழங்களை கொடுத்துக் கொண்டிருந்தது. நான் அதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன், நீங்கள் அடையவில்லையா-? ஓ, என்னே-! வெறுமனே அதைப் புசியுங்கள், சீமை மசால் புல்லை தின்னும் குதிரையைப் போல உமிழ் நீர் உங்களுக்கு வழியட்டும். அது சரியே. ஆம் ஐயா. ஒரு மகத்தான நேரத்தைப் பெற்று இருக்கிறோம், களி கூறுங்கள் (enjoy). 142. உலகம் சொல்வதைக் குறித்து நான் எதற்கு அக்கறை கொள்ள வேண்டும்-? எனக்கு ஒரு கவலையுமில்லை. என்னை உயர்த்தின அதே தேவன், அவரே என் ஆத்துமாவை இரட்சித்து, ராஜாக்களுக்கும், தேசம் முழுவதும் மற்ற அனைத்திற்கும் ஜெபிக்கும்படி என்னை அனுப்பினவர் அவரே. அதைச் செய்தது அந்த அருமையான பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியே ஆகும். நான் அதைக் குறித்து எப்போதும் வெட்கப்பட்டதேயில்லை. நான் இராஜாக்களின் அரண்மனைகளில், "நான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்று இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறேன். அல்லேலூயா. அது சரியே. அவர்களும் கூட பசியாய் இருக்கிறார்கள். அவர்கள் பசியாகவும் தாகமாகவும் இருக்கிறார்கள். 143. இங்கே கவனியுங்கள், அவர்கள் முறுமுறுக்கவும் புகார் அளிக்கவும் வேண்டியதாய் இருந்தது. தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 144. இப்பொழுது வேகமாக. நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது-? என்னை மன்னிக்கவும். நான் தாமதம் செய்கிறேன். நீண்ட போதனைக்காக என்னை மன்னிக்கவும். ஓ, நான் இன்னும் பாடத்தை எடுக்கவில்லை, அப்படித் தானே-? [சபையார் சிரிக்கின்றனர்- மொழி பெயர்ப்பாளர்]. ஒரு நிமிடம், நான் சிறிது நேரம் கழித்து என்னுடைய பாடத்தை தொடருகிறேன். இல்லை, நான் உங்களை சுற்று கிண்டல் செய்தேன், அமைதியாக உட்காருங்கள். இங்கே ஒரு சில வார்த்தைகளை நாம் பெற்றுக் கொள்ளுவோம், உங்களிடம் கூறும்படியான ஏதோவொன்றை நான் பெற்றிருக்கிறேன். 145. இப்பொழுது, 21-ம் அதிகாரம் 5-ம் வசனம்,மிகவும் உன்னிப்பாக கவனியுங்கள். ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து... வனாந்தரத்திற்கு வரப்பண்ணினதென்ன-? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். 146. அருமையான தேவ தூதர்களின் உணவு மற்றும் அதைப் போன்ற காரியங்களால் நிரப்பப்பட்ட பின்பு, அவர்கள், "ஓ, எங்களுக்கு அது சலித்து விட்டது, எங்களுக்கு சில பூண்டும் சில தானிய ரொட்டிகளும் (pumpernickel) வேண்டும்" என்றார்கள். அவர்களுக்கு எகிப்தின் பழைய இறைச்சிப் பானைகள் தேவைப்பட்டது. அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்கு உள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால்... அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால்... மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவம் செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைத்தான்; சர்ப்பம் ஒருவனை ஒருவனைக் கடித்த போது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான். 147. ஓ, நாளை இரவு ஆராதனைக்கு முன்பு நான் அந்த சிறிய காரியத்தை குறித்து பார்க்கட்டும். வெண்கல சர்ப்பம். கடந்த இரவு அடிக்கப்பட்ட கன்மலை, நாம் அடிக்கப்பட்ட கன்மலையோடு நிறுத்தி விட்டோம்; வெண்கல சர்ப்பமானது இயேசு கிறிஸ்துவாய் இருந்தது. "ஒரு சர்ப்பமா-?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். "ஆம்". 148. சர்ப்பமானது, 'பாவம் ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்டு விட்டது' என்பதைக் குறிப்பிடுகிறது. ஆதியாகமம் 3-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில், தேவன் ஏதேன் தோட்டத்திலே சர்ப்பத்தை நியாயம் தீர்த்தார். தேவன் ஏற்கனவே சர்ப்பத்தின் மீது நியாயத் தீர்ப்பை செலுத்தி விட்டார். ஓ, அவன் அழகுள்ளவனாய் இருந்தான், அவன் நிமிர்ந்து நடந்தான், சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரம் உள்ளதாயிருந்தது. ஆனால், தேவன் அவனை நியாயம் தீர்த்தார். அவனுடைய மீதமுள்ள நாட்கள் முழுவதும் அவனுடைய வயிற்றினால், அவனுடைய வயிற்றினால் நகரும்படி செய்தார். நியாயம் தீர்க்கப்பட்டுவிட்டது-! 149. "நம்முடைய பாவங்கள் நியாயம் தீர்க்கப்பட்டுவிட்டது என்பதாக கிறிஸ்து விளங்கினார். ஆமென். நீங்கள் அதைக் காண்கிறீர்களா-? அழகாயுள்ளது. என்னுடைய பாவம். உங்களுடைய பாவங்கள், நியாயமாக, நாம் நரகத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டும். ஆனால் கிறிஸ்துவானவர் நம்முடைய இடத்தை எடுத்துக் கொண்டார். சர்ப்பம், எனவே தான் அது கிறிஸ்துவைப் பறைசாற்றினது. 150. வெண்கலம், அந்த சர்ப்பமானது வெண்கலத்திலிருந்து வார்க்கப்பட்டதாயிருந்தது. அதன் அர்த்தம் "தெய்வீக நியாத்தீர்ப்பு. 'இப்பொழுது சர்ப்பமானது. 'பாவம் ஏற்கனவே நியாயம் தீர்க்கப்பட்டது' என்பதைக் குறிக்கிறது, வெண்கலமானது தெய்வீக நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. 151. வெண்கல பலிபீடத்தைப் போல். பலிபீடமானது வெண்கலத்தால் செய்யப்பட்டது, அது பலியின் உடல்களை சுட்டெரிக்கும். வேதவாக்கியங்களை குறித்துக் கொள்பவர்களே, நீங்கள் அதை யாத்திராகமம் 17-ம் அதிகாரத்தில் காணலாம். 152. இப்பொழுது, அவர்கள் அந்த மிருகத்தை எடுத்து, அதைக் கழுவினார்கள் (ஞான ஸ்நானத்திற்கான பரிபூரண முன்னடையாளம்), அதை உள்ளே கொண்டு வந்து, அதன் மீது தங்கள் கரங்களை வைத்தார்கள் (தங்கள் பாவங்களை அறிக்கையிடுதல்), அதன் கழுத்தை அறுத்தார்கள். இரத்தமானது... இரத்தம் சிந்தப்பட்டது, அதன் மாமிசம் சுட்டெரிக்கப்பட்டது, வெண்கல பலிபீடமாகிய அந்த பலிபீடத்தின் மேல், பலி செலுத்தும் இடத்தில் உள்ள இரத்தத்திலே, அங்கே தான் பாவங்கள் நிராகரிக்கப்பட்டன. அங்கே தான் அவர்கள்... அங்கே தான் நீதியுள்ள தேவனுக்கு ஒரு முற்றிலுமான வேறு பிரித்தல் தேவைப்பட்டது. மேலும் தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பானது. அக்கினியை கொண்டு, பாவத்திற்கான பலியை சுட்டெரித்தது. அல்லேலூயா. தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பானது இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்தது. 153. கவனியுங்கள், தெய்வீக நியாயத்தீர்ப்பானது மீண்டும் எலியாவின் நாட்களில் இருந்தது, அது ஒரு தெய்வீக நியாயத்தீர்ப்பாக இருந்தது என்பதை காண்பிக்கிறது. அங்கே ஒன்றுமே இல்லாத பொழுது, ஜனங்கள் தேவனை விட்டு வழிவிலகி இருந்ததான ஒரு நேரமாக அது காணப்பட்டது. அங்கே எலியா மலையின் மேல் சென்று ஜெபித்தான். அவன் இராஜாவுக்கு முன்பாக வந்து, 'நான் சொல்லும் வரை வானத்திலிருந்து ஒரு பனித்துளி கூட விழாது" என்றான். மூன்று வருடங்கள் மற்றும் ஆறு மாத காலங்கள் வரைக்கும் பூமியின் மீது ஒரு பனித்துளி கூட விழவில்லை. 154. மேலும், அப்படிப்பட்ட தான நேரம் வந்த போது, எலியா, “அக்கினியினால் பதிலளிக்கும் தேவன் யார் என்று நிரூபிப்போம்" என்று கூறினான். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார். அக்கினியினால் பதிலளிக்கக் கூடியவரே தேவன்." 155. நானும் இன்றிரவு அதையே கூறுகிறேன். அக்கினியினால் பதிலளிக்கும் தேவன், பரிசுத்த ஆவியாகிய அக்கினியினால் பதிலளிக்கும் தேவனே தேவன்-! 156. இப்பொழுது அவர்கள்... கவனியுங்கள், அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து பலியை பட்சித்தல் போன்ற காரியங்களை அவன் கவனித்துக் கொண்டு இருந்தான். அவர்கள் வானத்தை நோக்கிப் பார்த்தனர், அது வெண்கலம் போலக் காணப்பட்டது. அது என்ன-? அனைத்து தேசங்களின் மீதும் உள்ள தெய்வீக நியாயத்தீர்ப்பு. 157. மேலும் சகோதரனே, சகோதரியே, இன்றைக்கு நீங்கள் சுற்றிலும் காண்பீர்களென்றால், மீண்டும் வெண்கல நிறத்தை நீங்கள் காண்பீர்கள். ஒரு தேசத்தின் மீது தெய்வீக நியாயத் தீர்ப்பு வருகிறது. நியாயத்தீர்ப்பு-! கொள்ளிவாய் சர்ப்பம், கொள்ளிவாய் சர்ப்பங்கள். அதில் உள்ள தெய்வீக நியாயத்தீர்ப்பு. 158. இப்பொழுது கவனியுங்கள், வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு சர்ப்பத்தை உடையதாயிருந்த அந்த கம்பத்தை அவன் தூக்கி நிறுத்தினான். யாரெல்லாம் அதை நோக்கிப் பார்த்தார்களோ, அவர்கள் தங்கள் வியாதிகள் நீங்கி சொஸ்தமடைந்தார்கள். 159. இன்றிரவு அது இயேசு கிறிஸ்துவைப் பற்றியதான... என்னே ஒரு அழகான உருவகப்படுத்துதலாய் இருக்கிறது-! அவர், "மோசேயினால், மோசேயினால் சர்ப்பமானது வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல" என்று கூறினார். இங்கே அது உள்ளது, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், உங்களை சுகமாக்குவது எது என்பதை கண்டடைவீர்கள். "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல, மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்" என்று இயேசு கூறினதைப் போல. அதே காரணத்திற்காக. [ஒலிநாடாவில் காலியிடம் பதிப்பாசிரியர்] இரண்டு காரணங்களில், [ஒலிநாடாவில் காலியிடம் - பதிப்பாசிரியர்] "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.' 160. அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள்; பாம்புகளால் கடிபட்டார்கள்; சர்ப்பமானது இரண்டு வகையான காரியங்களை தனக்குள் கொண்டதாயிருக்கிறது. முதலாவது. அவர்களுடைய பாவங்களை மன்னிக்க; அடுத்தது அவர்களுடைய வியாதிகளை சுகப்படுத்த. இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கவும், நம்முடைய நோய்களை குணமாக்கவும் உயர்த்தப்பட்டார். [சபையார் 'ஆமென்' என்கின்றனர்-மொழிபெயர்ப்பாளர்.] 161. அடுத்ததாக பாதையிலே, பிலேயாம் வருகிறான். கூலிக்கு அமர்த்தப்பட்ட தீர்க்கதரிசி, இஸ்ரவேலைத் தடுக்க இறங்கி வருகிறான். ஓ, என்னே-! நாளை இரவு நாம் அதைக் குறித்துப் பார்ப்போம், எப்படியாக அந்த நபர்... வாயில்லா கழுதை பேசி அவனை கடிந்து கொள்ள வேண்டியதாய் இருந்தது. தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருந்த ஒரு பிரசங்கி; அவனது சிந்தை பணத்தின் மீது இருந்தது. அவன் அங்கே செல்கிறான், அங்கே அவனை ஒரு கழுதை கடிந்து கொள்ள வேண்டியிருந்தது, ஒரு ஊமையான கழுதை. ஒரு ஊமையான கழுதையின் மூலமாக தேவனால் பேசமுடியுமென்றால், நிச்சயமாக ஒரு மனிதன் மூலமாக அவரால் பேச முடியும்-! ஆம் ஐயா. 162. அந்த நேரங்களுக்கு பின்பு, பரிதாபமான மோசேயை அங்கே கவனியுங்கள். தேவனுக்கு முன்பாக ஒரு மனிதன் என்னவாய் இருக்கிறான் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். எப்படியாக கோராகு மற்றும் அனைவரும்... "மோசே நீ விலகிக் கொள்; அவர்கள் மொத்த கூட்டத்தையும் நான் அழித்து விட்டு, ஒரு மகத்தான தேசத்தை உன்னில் இருந்து எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் மோசேயிடம் கூறினபோது, கவனியுங்கள். 163. அப்பொழுது மோசே தேவனுக்கு முன்பாக தன்னையே குறிக்கீடாக வைத்து, தன்னை ஒரு இணைப்பாக ஏற்படுத்தி, “கர்த்தாவே, என்னை எடுத்துக் கொள்ளும்" என்று கூறினான். அந்த மனிதனைத் தாண்டி தேவனால் எதுவும் செய்ய முடியவில்லை; தேவனுக்கு முன்பாக ஒரு பரிசுத்தவானின் ஒரு வல்லமை. அதை கவனியுங்கள். 164. ஏசாயாவை கவனியுங்கள், அவன் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும். நீர் மரித்துப்போவீர், கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறினான். 165. ஒரு சில மணி நேரங்களிலேயே மீண்டும் திரும்பி வருமளவிற்கு. அது அவ்வளவு தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் அவனை சந்தித்தார், ஏனென்றால், எசேக்கியா சுவற்றுப் பக்கமாக தன் முகத்தைத் திருப்பி மிகவும் அழுது, "கர்த்தாவே, என்னை கருத்தில் கொள்ளும் என்று விண்ணப்பிக்கிறேன். நான் உமக்கு முன்பாக உத்தம இருதயத்தோடு நடந்தேன்" என்று கூறினான். அவனது கன்னங்களில் கண்ணீர் வழிந் தோடியது. தேவன் ஏற்கனவே அவனது முடிவை உறுதிப்படுத்தியிருந்தார், (God had already sealed his doom) ஆனால் ஜெபமானது காரியங்களை மாற்றிவிட்டது. அவர் தீர்க்கதரிசியிடம், "நீ திரும்பிப் போய் அவனிடம் சொல்' என்றார். 166. மோசே எப்பேற்ப்பட்ட ஒரு போர் வீரனாய் இருந்தான் என்பதை கவனியுங்கள். அவனுடைய கடைசி மணித்துளி வேளையில் அவன் கொடூர கோபமுடையவனாக அங்கே வந்து, இறுதியில் தேவனுக்கு பதிலாக தன்னையே மகிமைப்படுத்தினான். எனவே, தேவன் அவனை (வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்) அனுமதிக்காமல்... நிச்சயமாக இவை எல்லாமே மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே, இன்றைக்குள்ள மற்ற அனைத்து ஸ்தாபனங்களைப் போல் முன் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது (pre-pictured), அவர்கள் தங்களையே மகிமைப்படுத்துகிறார்கள். 167. ஒரு சில நாட்களுக்கு முன்பு, மிகப்பெரிய சபைகளில் ஒன்றில், குட்டையில் உள்ள ஒரே ஒரு வாத்து தான் அது என்று சொல்ல முடியாததற்கிணங்க. ஒரு கூடுகையில் அவர்கள் அந்த விதமாக ஒத்துழைப்பு தரவில்லை. (thumbs down). நான், "உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு தேவையில்லை. கழுகு எங்கேயோ... பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்" என்றேன். அது சரியாகத் தான் இருந்தது. ஆம் ஐயா. நீங்கள் சத்தியத்தை மாத்திரம் கூறுங்கள், தேவன் மற்றவைகளை பார்த்துக் கொள்வார். அங்கே தான் அவர்கள் காரியம், "ஓ, நாங்கள் தான் எங்கும் நிறைந்திருக்கிறோம்." (We are predominating) 168. அப்பொழுது நான், நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலை இல்லை. எங்கள் ஜீவியத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஒருவர் தேவனே" என்றேன். அது சரியே. தேவனை தான் கருத்தில் கொள்ள வேண்டும், சபை என்ன கூறுகிறது என்பதையல்ல. மேலும் சபையானது. அவர்கள் ஒவ்வொருவரும்... இங்கே உள்ள எந்த சரித்திர ஆசிரியரும் இதைக் கருத்தில் கொள்ள விரும்புவர். விழுந்த போன சபை எழுந்ததாக சொல்வதற்கு அங்கே எந்த ஒரு சபையும் இல்லை. தேவன் அவைகளை அலமாரியில் வைத்து விடுகிறார். அவர்கள் எழும்புவதில்லை. லுத்தரன் விழுந்தது, மெத்தடிஸ்ட் விழுந்தது, பிரெஸ்பிடேரியன் விழுந்தது, பாப்டிஸ்ட் மற்றும் அதன் வரிசையில் அனைத்தும் விழுந்தது, பெந்தெகொஸ்தே கூட விழுந்தது. தேவன் அவைகளை அலமாரியில் வீசி விடுகிறார். 169. நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பீர்களானால், நீங்கள் இதற்கு செவி கொடுங்கள். நான் இதை ஏவுதலோடு (inspiration) கூறுகிறேன். சரியாக இப்பொழுது அல்ல, ஆனால் சற்று நேரத்திற்கு முன்பாக வந்த காரியம்; ஒரு ஸ்தாபனம் கூட (நான் என்ன கூறுகிறேன் என்றால், முழு ஸ்தாபனமும்) தேவனுடைய இராஜ்யத்திற்குள்ளாக பிரதிநிதித்துவப்படுத்தப்படாது; ஆனால் அவைகளிலிருந்து ஒவ்வொரு வரையும் தேவன் வெளியே இழுத்து, சிறந்தவற்றை பிரித்து (cream of the crop), ஆவியினால் நிரப்பி, பின்னர் அவர்களை மகிமைக்குள் கொண்டு செல்வார். அது சரியே. [சபையார் ஆர்ப்பரிக்கின்றனர் - மொழி பெயர்ப்பாளர்.) 170. கடைசி சபைக் காலமானது லவோதிக்கேயா சபைக் காலம் என்று வேதம் முன் உரைக்கிறது. அது ஒரு வெதுவெதுப்பான சபைக்காலம். அவ்வளவான தூரத்திற்கு சபை ஆனது இன்றைக்கு வந்தடைந்து விட்டது, அது சரியே. அதாவது அவர்கள் தங்கள் கரங்களை ஒரு சிறிதளவு தட்டி, ஒரு சிறு சத்தத்தை உண்டு பண்ணி, (சகோதரன் பிரன்ஹாம் கரங்களைத் தட்டிக் காண்பிக்கிறார். மொழி பெயர்ப்பாளர்.) சிறிது குதித்து, இருக்கைகளை (furniture) சற்று உதைக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு தூய்மையான ஜீவியம் மற்றும் பரிசுத்தமான, களங்கமற்ற, புனிதமான ஜீவியமாகிய மெய்யாக ஜீவிக்கிற காரியம் என்று வரும் பொழுது, அவர்கள் பகலுக்கும் இரவுக்கும் உள்ள தூரத்தின் அளவிற்கு அவர்கள் சென்று இருப்பார்கள். [சபையார் ‘ஆமென்' என்கின்றனர் - மொழிபெயர்ப்பாளர்.] அது சரியே. சகோதரனே, இன்றைக்கு நமக்கு தேவையானது என்னவென்றால், ஒரு பண்டைய பாணியிலான மரித்தலே ஆகும். பலிபீடத்திற்கு திரும்ப போய், பின்னர் வெளியே வந்து, பின்னர் பலிபீடத்திற்கு திரும்ப போய். மீண்டும் பலிபீடத்திற்கு திரும்ப போவதல்ல. ஆனால் அங்கே சென்று நீங்கள் மரிக்கும் வரை அங்கேயே தரித்திருங்கள், அப்பொழுது ஒரு மரித்துப் போன மனிதனுக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அல்லேலூயா-! அதன் பேரில் மீண்டும் துவங்க வேண்டியதில்லை. சகோதரனே, கவனியுங்கள், நான் உங்களுக்கு கூறட்டும். 171. தேவன் அவருடைய எளிமையான ஊழியக்காரனாகிய மோசேயை கொண்டிருந்த LISOTY... ஒரு முறை ஒருவர் என்னிடம், "நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அது தேவனையே காண்பிக்கிறது, நீங்கள் மாத்திரம் அவனை தேவனென்று அழைப்பீர்களானால்.... மேலும் அவர் தம்முடைய ஊழியக்காரனை விழும்படி செய்தார்'' என்றார். பின்னர்... 172. மோசேயின் வாழ்க்கையானது 40 சுழற்சியில் ஓடுகிறது. அவன் 40 வயதாய் இருந்த போது அழைக்கப்பட்டான், தன்னுடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டான். பின்னர் வனாந்திரத்திற்கு ஓடிப் போய் 40 வருடங்கள் ஆடுகளை மேய்த்தான். அவன் 80 வயதாய் இருந்த போது, எகிப்திலிருந்து இஸ்ரவேலை விடுவிக்கும் படியாக அவர் அவனை அனுப்பினார். பின்னர், அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சமீபித்த போது அவன் 120 வயது உடையவனாய் இருந்தான். ஒரு இளைஞனைப் போன்ற நடையை உடையவனாய் இருந்தான். 120 வயதிலும் அவனுடைய பார்வை மங்கிப் போகவில்லை, அது சரியே. 173. ஆனால் அவன் கீழே, அந்த கன்மலையில், தேவனை மகிமைப்படுத்துவதற்கு பதிலாக தன்னை மகிமைப்படுத்தின போது; தேவன் அவனிடம், "நீ போய் அந்த கன்மலையிடம் பேசு" என்றார். "அதை அடிக்காதே. அதனிடம் பேசு." கன்மலை ஒரு முறை அடிக்கப்பட்டிருந்தது. 174. அப்பொழுது மோசே தன்னுடைய உச்சக்கட்ட கோபத்தை பெற்றவனாய் அங்கே ஓடிச் சென்று கன்மலையை அடித்தான், அது தண்ணீரைக் கொடுக்கவில்லை. அதை மீண்டும் அடித்தான், அது தண்ணீரைக் கொடுத்தது. "கலகக்காரரே, உங்களுக்கு இந்தக் கன்மலையில் இருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமோ-?" என்று கூறினான். அந்த விதமாக சொல்லி தண்ணீரைக் கொண்டு வந்தான் (Like that, and brought forth the waters). ஏனென்றால், தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு செவி கொடுக்க வேண்டியவராய் இருந்தார், ஏனெனில், அந்த வல்லமையை அவனுக்கு அவர் கொடுத்திருந்தார். மேலும், அது தேவனுடைய வேதாகமத்தின் முழு திட்டத்தையுமே உடைத்துப் போட்டது. 175. கிறிஸ்து ஒரு முறை அடிக்கப்பட்டார். இப்பொழுது நாம் கன்மலையிடம் பேசுகிறோம், பாருங்கள், அது தன்னுடைய தண்ணீரைக் கொண்டு வருகிறது. அது ஏற்கனவே அடிக்கப்பட்டு உள்ளது. வெறுமனே அதனிடம் பேசுங்கள். அப்பொழுது அது தன்னுடைய தண்ணீரைக் கொண்டு வரும். 176. இப்பொழுது, அந்தக் காலை வேளையில் நான் அவனைக் காண்கிறேன். நான் அந்த காட்சியை எண்ணிப் பார்க்கும் பொழுது, என் இருதயம் ஏறக்குறைய நின்று போகிறது. நான் மோசேயைக் காண்கிறேன். அவன்... அறிந்திருந்தான். தேவன் மோசேயிடம், "மோசே, உன்னுடைய சபையார் அனைவரிடமும் 'விடை பெறுகிறேன்' (so long) என்று சொல், இன்றைக்கு நான் உன்னை இன்னும் சற்று உயர இப்பொழுது உன்னை அழைத்துக் கொள்வேன் (call you up a little higher)” என்றார். 177. தன்னுடைய நீண்ட வெள்ளை தாடியுடன், தன்னுடைய தலைமயிர் தன்னுடைய முகத்தில் தொங்கிக் கொண்டிருக்க. கண்ணீரினால் அவனுடைய கண்கள் மங்கலாகி, அங்கே நின்று கொண்டு இருக்கிற தன்னுடைய ஜனங்களை பார்த்துக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கிற வயதான மோசேயை என்னால் காண முடிகிறது. எப்படியாக அவன்... எப்படியாக அவர்கள் முறுமுறுத்தார்கள், ஆனால் எப்படியாக அவன் அவர்களுக்காக நின்றான். அவர்கள் அனைவரையும் அவன் நோக்கிப் பார்த்தான். பின்னர் அவன் மலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் மலை மீது ஏறி, பின்னால் திரும்பி அவர்களிடம் விடைபெறும் நோக்கில் கையசைக்க ஆரம்பித்தான். அவன் மேலேறி, மலையின் உச்சிக்கு செங்குத்தாக ஏறினான். அது ஏப்ரல் மாதமாக இருந்தது. அவன் அங்கே நின்றவனாய், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் பார்த்தான். ஓ. அவன் எவ்வளவாய் அங்கே செல்வதற்கு விருப்பமுள்ளவனாய் இருந்தான்-! என்னே, அவனுடைய பரிதாபமான இருதயம் உடைந்து கொண்டிருந்தது. தான் வழிநடத்திக் கொண்டு வந்த வழியில் நின்று கொண்டிருக்கிற யூத ஜனக்கூட்டத்தாரோடு அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல அவன் விருப்பமுடையவனாய் இருந்தான். அங்கே தான் அவனுடைய காரியம், அவன் அங்கே நோக்கிப் பார்த்தான். அவனுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவன் திரும்பி பார்த்து, ஜனங்களிடம் மீண்டும் கையசைத்து விடைபெற்றான், அவர்களுடைய வயதான போதகர். அவன் போய்க் கொண்டிருந்தான். அவன் இந்த விதமாக அவர்களை நோக்கி கையசைத்தான். அவன் பின்னாக திரும்பி பார்த்தான். 178. என்னால் மாத்திரம் மோசே நின்ற அதே இடத்தில் நின்று கொண்டு நான் அந்த தேசத்தை பார்க்க முடிந்தால்-! தேவனுக்கு சித்தமானால், அடுத்த சில மாதங்களில், அங்கே அந்த மலையில் நின்று அவர்கள் கடந்து சென்ற இடத்தை நோக்கிப் பார்க்க விரும்புகிறேன். 179. அன்றொரு நாள் நான் ஒரு படக்காட்சியைக் கண்டேன், சகோதரர்களில் சிலர், கூட்டங்களில் அங்கே இருந்த நமது சகோதரர்களில் 40 பேர், அங்கே சென்று, அதனுடைய படக்காட்சியை எடுத்தார்கள். அவர்கள் அங்கிருந்து சென்ற போது, கிட்டத்தட்ட கரையிலே உள்ள புதர்கள் அனைத்தும் நீங்கும் அளவிற்கு அவர்கள் கத்திக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர் இஸ்ரவேல் புத்திரர் கரையேறின அந்த இடத்திலே. இயேசு ஞான ஸ்நானம் பெற்ற அந்த இடத்திலே, அந்த பிரசங்கியார்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அணிந்திருந்த உடைகள் அனைத்தோடும் அங்கே தண்ணீருக்குள் குதித்து ஒருவருக்கொருவர் ஞான ஸ்நானம் கொடுத்துக் கொண்டனர்-?, சகோதரனே, அசைவாடிக் கொண்டும் சுழன்று கொண்டும் இருக்கிறதான ஏதோவொன்று அங்கே இருக்கிறது. நாம் ஜீவிப்பது... அவர்கள் காரின் உள்ளே சென்று, காரில் சற்று தூரம் சென்று, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் செய்த இடத்திலே பிரயாணம் செய்ததாக கூறுகின்றனர். வயதான ராபின்சன் கூறினதைப் போன்று: "இந்தக் காரியத்தை (வண்டியை) நிறுத்துங்கள், உடனடியாக-!" பின்னர் அவர் கீழிறங்கி, இங்கும் அங்கும் சுற்றிலும் ஓடி. அவ்விடத்தைச் சுற்றிலும் சத்தமிட்டு, "தேவனுக்கு மகிமை-! அல்லேலூயா-!" என்று உரக்கக் கத்திவிட்டு, பின்னர் அவர் உள்ளே வந்து, வண்டியை ஓட்டு' என்றார். அவர் அப்பேற்ப்பட்டதான ஒரு தருணத்தை உடையவராய் இருந்தார்-! நிச்சயமாக-! 180. மோசே நின்ற அதே கன்மலையின் மேல் நின்று கொண்டு என்னால் மாத்திரம் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட அந்த தேசத்தை பார்க்கக் கூடுமானால்-! அவன் போக விரும்பினான், அவன் தன்னுடைய சபையாரை நோக்கி திரும்பினான், மீண்டும் அவர்களை நோக்கி சென்று வருகிறேன் என்று கையசைத்தான். அவனுடைய நீண்ட தாடியின் வழியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. அவனுடைய இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. (His hour was coming.) அவனது கரங்களில், இங்கே அவனது கரங்களில் மேலேறி வருகிறது, நாடித்துடிப்பு அவனது கரங்களில் மேலேறி வருகிறது, ஒரு வயோதிப் போர்வீரன். (The pulse begin to come up the sleeve) 181. சரியாக இப்பொழுதே என்னால் சொல்ல முடியும், சகோதரனே, நான் சற்று 'பாப்டிஸ்ட்' பக்கம் போகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஆனால், சகோதரனே, அவன் இழக்கப் படவில்லை. இல்லை, அவன் இழக்கப்படவில்லை. தேவன் தம்முடைய ஊழியக்காரரை விழச் செய்ய மாட்டார். 182. இந்த விதமாக உடையின் கைப்பகுதி மேலே வந்தது. முதலாவது காரியம் என்ன தெரியுமா, அவன் பிடிக்கப்பட்டான், துடிப்பு நாடித்துடிப்பு குறைந்து கொண்டிருந்தது. அவன் அங்கே நோக்கிப் பார்த்த போது. அந்த தேசத்தை நோக்கிப் பார்க்கையில் அவனது பார்வை மங்கலாக ஆரம்பித்தது. எவ்வளவாக அவன் அங்கே போக விருப்பம் கொண்டிருந்தான்-! ஓ, என்னே-! அவனது இருதயம் நொறுங்கிக் கொண்டிருந்தது. 183. அவன் இந்த வாழ்க்கையை விட்டு போகும்படி ஆயத்தமான போது, தன் அருகில் நின்று கொண்டிருந்த ஒன்றை அவன் காண நேரிட்டது, அங்கே கன்மலை நின்று கொண்டிருந்தது. [சகோ.பிரன்ஹாம் ஒரு கணம் அமைதியாக இருக்கிறார் - மொழிபெயர்ப்பாளர்.) எதிர் பார்த்தப்படி ('just so' - exactly as someone wants மிகச் சரியாக ஒருவருடைய எதிர்பார்ப்பின்படி மொழி பெயர்ப்பாளர்.) அவர் அங்கே இருக்கிறார், அதுவே போதுமானது (that's all). அவன் அந்த கன்மலையின் மீது தனது அடியை எடுத்து வைத்தான். தூதர்கள் வந்து அவனை அழைத்துச் சென்றனர். 184. அதன் பின்னர் 800 வருடங்கள் கழித்து, எலியாவின் அருகில் அவன் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் நின்று காண்டு, இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தான். அவர் உன்னை விழச் செய்வதில்லை. 185. இந்நாட்களில் ஒன்றில், நான் பாதையின் முடிவிற்கு வர வேண்டியவனாய் இருக்கிறேன். இப்பொழுது எனக்கு 43-வயதாகிறது. மிகவும் உடைந்து போனவனாக ஆகிக்கொண்டு இருக்கிறேன். நான் 20 வருடங்களாக பிரசங்கம் பண்ணியிருக்கிறேன். நான் தண்ணீர்கள் ஊடாகச் சென்று, பனிக்கட்டியை உடைத்து, நின்று கொண்டு, கிட்டத்தட்ட பனியினால் உறைந்து போகும் வரை ஞான ஸ்நானம் கொடுத்திருக்கிறேன். நான் எதுவுமற்றவனாக இருந்திருக்கிறேன், எதுவுமற்றவனாக சென்றிருக்கிறேன். காடுகள் மற்றும் எல்லாவற்றின் ஊடாகவும், வியாதிகள் மற்றும் ஒவ்வொன்றிலும் கவனிக்கப்படாதவனாகவும் இருந்து இருக்கிறேன். இன்னும் நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதைக் காட்டிலும் அதிகமான காலத்தைக் காண நான் ஜீவிப்பேன் என்றால், ஒருக்கால் நான் வயது சென்றவனாக ஆகும் போது. இயேசு வரத் தாமதிக்கும் பட்சத்தில், அநேகமாக எனக்கிருக்கும் தலைமயிரானது கீழே தொங்கிக் கொண்டிருக்க நின்று கொண்டிருப்பேன். என்னுடைய ஜனங்கள் எல்லாரும் வயதாகும் போது பக்கவாதம் வந்து. நடுக்கத்தை பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு யுத்தத்தின் ஊடாகவும் நான் என்னுடைய வழியில் சண்டையிட்ட போது, என்னுடைய எல்லா நண்பர்களும் மற்றும் காரியங்களும் போய் விட்ட போது, நான் அங்கு நின்று கொண்டு, அங்கே புரண்டு வந்து கொண்டிருக்கிற தண்ணீர்கள் வரும் சத்தத்தைக் கேட்பேன், நான் இந்த விதமாக என்னுடைய கோலின் மேல் நடுக்கமுற்றவனாய் இருக்கிறேன், இங்கே இருக்கும் இந்தப் பழைய பட்டயத்தை எடுத்து, நித்தியத்தின் உறையின் பின்னால் ஒட்ட வைத்து, என்னுடைய தலைச்சீராவை (helmet) கழற்றி, அதை கீழே வைத்து விட்டு, என்னுடைய கரத்தை உயர்த்தி, 'அல்லேலூயா' என்று சொல்லி, “கர்த்தாவே, ஜீவபடகை தள்ளி விடும், நான் இந்தக் காலையில் அக்கரை வருகிறேன். நான் ஆற்றைக் கடந்து வருகிறேன்" என்று கூற விரும்புகிறேன். அவர் என்னை விழுந்து போக அனுமதிக்க மாட்டார். 186. நான் இங்கே இருக்கையில், வெளிச்சம் இருக்கும் போதே, நான் பிரசங்கம் பண்ணி, ஜெபித்து, மன்றாடி, பாடி தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். என்னுடைய ஆத்துமா இந்த சரீரத்தை விட்டு எடுக்கப்பட ஆரம்பிக்கையில், நான் கீழே திரும்பிப் பார்த்து, என்னுடைய அடிச்சுவடுகளைக் கண்டு, "காலமென்னும் மணற் பரப்பில் அடிச்சுவடுகளை நமக்கு பின்னால் இட்டுச் செல்கிறோம்' என்று சொல்லத்தக்க அளவில் அவைகள் சரியான இடத்தில் இருக்கும்படி விரும்புகிறேன். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா-? டெடி, சற்று நீ இசைக்கருவியிடம் (piano) செல். 187. எங்கள் பரலோகப் பிதாவே, ஒ, இந்த மகத்தான களிகூறுதலின் நேரங்களுக்காக, எவ்வளவான மகிழ்ச்சி-! நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழப்பதாக யூகிக்கிறேன். கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய ஆத்துமாவை ஞானஸ்நானம் செய்விக்கிறார். என்னால் அதை தடுக்க முடியவில்லை. ஏதோவொன்று என்னை பற்றிப் பிடிக்கிறது. (டெடி அவர்கள் பின்னணியில் இசை வாசிக்க ஆரம்பிக்கிறார் மொழி பெயர்ப்பாளர்.] கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் வரத்தக்க வகையில், எல்லா பாத்திரங்களும், பாதைகளும் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் பெற்றுக் கொள்வதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். குழாயில் உள்ள அடைப்பை நீக்கிவிடும், அதினிமித்தம் தேவன் விரும்பும் எந்த நேரத்திலும் இரட்சிப்பின் தண்ணீரானது ஊற்றப்படக் கூடும். அதற்காக விண்ணப்பம் பண்ணுங்கள். எலிசா யோசபாத்திடம் கூறினது போன்று: "கால்வாயை வெட்டுங்கள். அதிலிருந்து அனைத்து கற்களையும், அனைத்து குச்சிகளையும், கட்டைகளையும் எடுத்துப் போடுங்கள். அதிலே தண்ணீர் வரப் போகிறது." 188. உமக்கு நன்றி, கர்த்தாவே, நீர் இன்றிரவு இங்கு இருக்கிறீர். நான் அந்த வயதான தீர்க்க தரிசியாகிய மோசேயை நினைத்துப் பார்க்கிறேன்-! தேவனே, அவனுடைய துணிச்சலான ஆத்துமாவை ஆசீர்வதியும். அவன் அந்த மலையின் மேல் நின்று, வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தை பார்த்து கொண்டிருந்ததைப் போல, கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் அவ்வாறு பார்த்துக் கொண்டு நிற்கிறோம். நான் எனக்காக கேட்டுக் கொள்ளக்கூடிய ஒரே ஒரு காரியம் என்னவெனில், நான் அங்கு போகையில் அந்த கன்மலையானது அங்கே இருப்பதாக. தேவனே, அதுவே எனக்கு போதுமானதாக இருக்கும். (That will be alright with me). கர்த்தாவே, நான் தவழ்ந்து சென்று, உம்முடைய புனிதமான பாதத்தை ஒரு விசை தொட்டு, என்னுடைய தகுதியற்ற கரங்களால் அவைகளை தட்ட முடியுமென்றால், நான் என் ஜீவியத்தில் செய்திருக்கிற எல்லாவற்றையும் லட்சக்கணக்கான மடங்கு அது எனக்கு திரும்பத் தரும். அந்த பாதையில் நாங்கள் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம் என்பதை நாங்கள் எல்லோரும் அறிந்து இருக்கிறோம். எங்களில் சிலருக்கு அது சில மணி நேரங்களிலேயே கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது, நீரே அறிவீர். 189. நாங்கள் இன்றிரவு இங்கே இருக்கையில், பிதாவே. பரிசுத்த ஆவியானவர் இன்னுமாக பிரசன்னமாகி உம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், பிதாவே, நான் ஒன்றை உம்மிடம் கேட்கிறேன். இரட்சிக்கப்படாத யாராவது இங்கே இருப்பார்களெனில், கர்த்தாவே, உம்மை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்திராத யாராவது, உமக்கு முன்பாக எவ்வாறு நிற்க வேண்டுமென்று அறியாதவர்கள் யாராவது இருப்பார்கள் எனில், கர்த்தாவே, நான் உம்மை கேட்கப் போகிறேன், நீர் மாத்திரம்... நான் பேசுவதை அவர்கள் கேட்பதை அல்ல, ஆனால், நீர் அந்த இருதயத்துடன் பேசி இன்றிரவு அவர்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும். என்று நான் உம்மை கேட்டுக் கொள்கிறேன். 190. ஒரு வேளை கடைசி அழைப்பாக இருக்கலாம். நமக்கு எப்படி தெரியும்-? ஏன், அனைத்து நித்தியமும் இதன் மேல் இளைப்பாறுகையில், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 191. கர்த்தாவே. தன் கட்டுப்பாட்டை இழந்த யாராவது ஒருவர் வழிதவறினவராக இருப்பார்களென்றால், ஒரு வேளை அவர்கள் அந்த தேசத்தை நோக்கிப் பார்க்கும் படியாக மலையின் மேல் ஏறிக் கொண்டிருந்து, பின்னர் தள்ளப்பட்ட நிலையில் இருக்கலாம். தேவனே, கன்மலையானது அவர்களோடு கூட இருக்கட்டும் என்று நான் விண்ணப்பிக்கிறேன். இப்பொழுது எங்களுக்கு உதவியருளும், மேலும். நாங்கள் காத்து இருக்கையில் இந்தக் கூட்டத்தாரை ஆசீர்வதியும். 192. இப்பொழுது இங்கே ஒரு மனிதனோ, ஸ்திரீயோ, பையனோ, பெண்ணோ உங்கள் தலை வணங்கிய நிலையில் இருப்பீர்களென்றால்... தயவு கூர்ந்து யாரும் நிமிர்ந்து பார்க்க வேண்டாம். சில நேரங்களில் ஜனங்கள் இவ்வகையான காரியங்களில் மிகவும் கூச்சம் உள்ளவர்களாகவும், சில நேரங்களில் சிணுக்கம் உள்ளவர்களாவும் இருக்கிறார்கள், (touchy (sensitive) - எளிதில் வருத்தம் அல்லது சினம் அடைதல், மட்டுமீறிய புண் படைத்தல், தொட்டாற் சிணுங்கியாக இருத்தல் மொழி பெயர்ப்பாளர்.) இருப்பினும் அவர்கள் நற்பண்புள்ள மனிதர்களும் ஸ்திரீகளுமே. 193. இந்த 43ஆண்டு காலங்களில் நான் அதிகமான அதிகமான பின்னணியை உடையவனாய் இருந்திருக்கிறேன். ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் இங்கே ஒரு சிறு பையனாய் ஓடிக் கொண்டிருந்தேன், உங்களோடு கோலி (marbles) விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லது, நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன். என்னால் அதை உணர முடிகிறது. நான் - நான் 20 வருடங்களாக முயற்சித்திருக்கிறேன், உங்களுக்கு ஏதொவொன்றை அறிமுகப்படுத்தும் படியாக முயற்சித்திருக்கிறேன். 194. ஜெபர்சன்வில்லே, நீ ஏன் அதை புறக்கணிக்கிறாய்-? தேவன் அதை உறுதிப்படுத்தினார். தமது தூதனை அனுப்பினார், அதன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அது உலகெங்கும் அறியப்பட்டுள்ளது, அப்படியிருக்க ஏன் அதை ஒரு- ஒரு வகையான பாவனை விசுவாசக் காரியமாக எண்ணுகிறாய்-? 195. இன்றிரவு நீ தேவனற்றவனாக இருக்கிறாயா-? உண்மையாகவே அவரை அறிந்து கொள்வதற்கு நேசம் கொள்வாய். அப்படிப்பட்டதான ஒரு இரட்சிப்பானது நீ மரிப்பதற்கு முன்பாக உனக்கு தேவையாய் இருக்கிறது என்பதை நீ அறிந்திருக்கிறாய். 196. இங்கே சில நாட்களுக்கு முன்பு இதே நகரத்தில், இங்கே இந்நகரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சபையை சார்ந்த ஒரு இளம் ஸ்திரீயானவள், அவள் நன்றாக இருக்கிறாள் என்பதாக நினைத்துக் கொண்டாள். அவளுடைய போதகரும் அவள் சரியாக இருக்கிறாள் என்று கூறினார். அவள் சபைக்குச் செல்லுகிற ஒரு சிறு பெண்மணியை கேவி செய்தாள், ஏனெனில் அவள் பகட்டுக்காக அங்கே செல்வதில்லை. அவளோ, "உன்னுடைய போதகர் குறுகிய மனோபாவம் உடையவர்" என்று அந்த பெண்மணியிடம் கூறினாள். அதற்கு அந்த சிறு பெண்மணி, "அது பரவாயில்லை" என்றாள். 197. பின்னர் அவள் ஒரு தவறான ஐக்கியத்தை பெற்றிருந்து. நோயால் பீடிக்கப்பட்டு, அதை வெகு தூரம் கொண்டு வந்து விட்டாள். மருத்துவர், இந்நகரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அவளை பரிசோதிக்கச் சென்றார். பால்வினை நோய் அவளை தின்று விட்டது என்பதை கண்டறிந்தார். அதன் பின்னர் உடனேயே அவள் மரித்து விட்டாள். அவர்கள்... அவள் அந்த பெரிய சபையில் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியையாக இருந்தாள். அவள் பரலோகத்திற்கு போவதைக் காணும் பொருட்டு, அவர்கள் அனைவரும் அங்கே குழுமி இருந்தனர். அந்த நேரத்தில், அவளது ஞாயிறு பள்ளி வகுப்பே உள்ளே இருந்தது. அவளது போதகர் முகப்பு அறையில் இங்குமங்கும் நடந்தவராய், ஒரு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தார். அவளது இறுதி நேரம் வரும் போது, தூதர்கள் வந்து அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவளோ எழுந்திருந்து, "போதகர் எங்கே-?'' என்றாள். அவர்கள் சென்று அவரை அழைத்து வந்தனர். அப்பொழுது அவள், "வஞ்சகனே-!" என்றாள். மேலும்,"நீ ஏன் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தாய்-? நான் இழக்கப்பட்டுவிட்டேன்" என்றாள். 198. கவலைப்படாதீர்கள், தேவனுக்கு முன்பாக வந்த போது ஆதாம் தான் அணிந்திருந்தது வெறும் அத்தியிலைகளே என்பதை அறிந்து கொண்டான். தேவன் அருகில் இல்லாதபோது அது நல்லதாகத்தான் இருந்தது. "என்னை ஏன் இந்த விதமாக போக விடுகிறீர்-? அங்கே அந்த கூடாரத்திலிருந்து வரும் அந்த சிறுபெண் எங்கே-?" என்றாள். 'ஓ, அவள்...'' அவர், "நீ நீ -- நீ உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாய். உனக்கு அதை கட்டுப்படுத்த நான் ஒரு மருத்துவரை அழைக்கப் போகிறேன்" என்றார். அதற்கு அவள், "மனிதனின் வஞ்சகனே-! நான் இழக்கப்பட்டேன், உன்னால் என் ஆத்துமா பாதாளத்திற்குச் செல்கிறது" என்றாள். அவள் தலை சாய்ந்து விட்டது. 199. இப்பொழுது சரியாக இங்கே ஒரு பட்டறையில் வேலை பார்க்கும் என்னுடைய ஒரு நல்ல நண்பர், சவ அடக்கம் செய்பவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர்கள் அவளது உடலில் திரவத்தை ஏற்றும்படி சென்றிருந்தனர். அவர்கள் திரவத்தை செலுத்திக் கொண்டிருந்தனர், அந்த திரவத்தின் வாசனை வீசிக் கொண்டே இருந்தது. அவளது நரம்புகளில் அது நிறையவில்லை. பின்னர் துணியை கீழே இழுத்துப் பார்த்தனர். அப்பொழுது கிட்டத்தட்ட உங்கள் கை முட்டி அளவிற்கு ஒரு ஓட்டை அவளது சரீரத்தை தின்றிருந்தது. பால்வினை நோய் அதை தின்று விட்டது.ஓ ஆம், அவள் ஒரு பெரிய நேரத்தை பெறத்தான் போகிறாள். இந்த மற்ற சிறு பெண்ணோ பரிசுத்த உருளையாய் இருந்தாள். நண்பனே எதையும் குறைத்து மதிப்பிடாதே. 200. இன்றிரவு நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்களா-? நீங்கள் மெய்யாகவே இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்களா-? இயேசுவின் நாமத்தில் நான் உங்களைக் கேட்கிறேன். இங்கே இன்றிரவு, இரட்சிக்கப்படாத, மறுபடியும் பிறவாத ஒரு மனிதனோ ஸ்திரீயோ, பையனோ பெண்ணோ இருப்பீர்களாகில், உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? எனக்காக ஜெபியுங்கள் சகோதரர் பிரன்ஹாமே என்று கூறுங்கள். இப்பொழுது அனைத்து கிரகங்களும் வணங்கியுள்ளன. ஆம். வாலிப பெண்ணே. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, உம்மை. உம்மை, உம்மை. உம்மை, உம்மை, உம்மை. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. உம்மை, உம்மை. பின்னால் அங்கே பின்னால், கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. வாலிப மனிதனே உன்னுடைய உத்தமத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. நான் உன்னைக் காண்கிறேன், அருமை. இந்த சிறு கட்டிடத்தில் மனந்திரும்பாத (unregenerated மறுஉற்பத்தி செய்யப்படாத) 20 அல்லது 30 கரங்கள். இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து கொண்டு உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார். உங்களுக்கு அவர் தேவையாயிருக்கிறார். நீங்கள் ஏன் வரக்கூடாது-? பலிபீடத்திற்கு முன்பாக வந்து முழங்காற்படியிட மாட்டீர்களா-? "கர்த்தராகிய தேவனே, நான் இன்றிரவு உம்மை என்னுடைய தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக் கொள்ளப் போகிறேன். இப்பொழுதே உம்மை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன், பரிசுத்த ஆவியின் ஞான ஸ்நானத்தை நான் பெற்றுக் கொள்ளப் போகிறேன். எனக்கு அது தேவை. உலகம் என்ன சொல்வதாக இருந்தாலும் அது எனக்கு கவலையில்லை. நான் உம்மை ஏற்றுக் கொள்ளப் போகிறேன். நீர் எனக்கு வாக்குத் தத்தம் செய்திருக்கிறீர்” என்று கூறுங்கள். 201. மேலும், கரங்களை ஏறெடுத்திருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும், இந்தக் கூட்டத்தில்- இந்தக் கூட்டங்களில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் கவனியுங்கள். தேவன் உங்களை இழுத்துக் கொள்ளாவிட்டால், இங்குள்ள ஒருவர்கூட இயேசுவிடம் வந்திருக்க முடியாது. அதைச் செய்வது எது-? அந்த வாஞ்சையை உண்டு பண்ணுவது எது-? தேவன் இங்கே இருக்கிறார். தேவன் இங்கே இருக்கிறார். 202. நண்பனே. கவனி. தேவன் என் ஜெபத்தை கேட்பாரென்றால், ஒரு மனிதனாக, நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக விசுவாசிப்பீர்களென்றால், மேலும். செய்தித் தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும், அதிகாரப்பூர்வமாகவும் படித்து இருக்கிறீர்கள் மற்றும் இன்றிரவு அங்கே கதவுக்குப் பின்னால் அவர்கள் விற்றுக் கொண்டு இருக்கின்றதான அந்த படங்களைப் பாருங்கள். தேவ தூதனின் படம், அக்கினியோடு தகிக்கின்ற, எரிகின்ற முட்செடியில் இங்கே நான் கவனித்துக் கொண்டிருக்கிற (gm reading about) அதே ஒருவர் தான், மேலும், என்னை தேவனுடைய ஊழியக்காரனாக விசுவாசிப்பீர்கள் என்றால், என்னுடைய ஜெபத்தை அவர் கேட்பாரென்றும், நீங்கள் ஜெபிக்கும்போது உங்களது ஜெபத்தையும் கேட்பார் என்றும் நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால் நீங்கள் உங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நிற்பீர்களா-? அந்த அளவு உண்மையான நம்பிக்கையை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா-? இங்கே வந்து, இந்த பீடத்தண்டை நின்று, "சகோதரன் பிரன்ஹாமே, அவர் குருடனுடைய கண்களைத் திறந்தால், என்னுடைய பாவங்களையும் அவர் மன்னிப்பார்" என்று கூறுங்கள். வாலிப மனிதனே, நீ உன்னை முதல் ஆளாக ஆக்கினதற்காக, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. பீடத்தண்டை வரும்படி இந்த வாலிபனைத் தொடர்ந்து வருவது யார்-? 203. இக்கட்டிடத்திலுள்ள ஊழியக்காரர்கள் வரும்படி விரும்புகிறேன். இந்தக் கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு பிரசங்கிமார்களும் பீடத்தண்டை ஒரு நிமிடம் வாருங்கள் (வாலிய பெண்ணே, வா, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வேறு யாராவது). ஊழியக்காரர்கள் மேடையின் மீது இங்கே வரும்படி விரும்புகிறேன், நீங்கள் விரும்பினால். 204. பாவியான நண்பனே, முன்னே வா, வாலிப மனிதனே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. முன்பாக வந்து சரியாக அங்கே முழங்காற்படியிடு. ஐயா, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் வாருங்கள். சீமாட்டியே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. பீடத்தண்டை இங்கே வந்து முழங்கால் படியிடும்படி உங்கள் வழியை உண்டு பண்ணுகிற வேறு யாராகிலும்-? நீங்கள் தேவன் அற்றவர்களாக இருக்கிறீர்களா-? கிறிஸ்துவை கொண்டிராதவர்களாக, இன்றிரவு, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு உலகத்தில் யாராகிலும் இருக்கிறீர்களா-? ஓ, நீங்களோ, "சுற்று தாமதமாகிக் கொண்டிருக்கிறது. என் மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்கிறீர்கள். 205. ஒரு சிறு முடமான பெண் தன் வழியை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறாள். ஆரோக்கியமாய் இருக்கிற ஜனங்களாகிய உங்களுக்கு வெட்கம் உண்டாகட்டும். இன்றிரவு நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்த ஒரு அந்நியனாய் இருக்கிறீர்களா-? தேவனற்றவர்களாக, கிறிஸ்து இல்லாதவர்களாக, பாவத்திலும், அவமானத்திலும் மரித்துக் கொண்டிருக்கிறீர்களா-? நீங்கள் வரமாட்டீர்களா-? ''சகோதரன் பிரன்ஹாமே, நான் அங்கே வருகிறேன், நான் உம்முடைய கரங்களை குலுக்கி, பீடத்தண்டை அங்கே முழங்காற்படியிட விரும்புகிறேன். இப்பொழுதே இயேசு கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று எழுந்து நின்று சொல்வதற்குப் போதுமான பொதுவான கண்ணியத்துடன் கூடிய புருஷனாக ஸ்திரீயாக இருப்பீர்களா-? நீங்கள் வருவீர்களா-? 206. கரங்களை உயர்த்தி இருக்கிற நீங்கள் அனைவரும், நீங்கள் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள, நீங்கள் இங்கே தேவனுடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றும், இருப்பினும் பீடத்தண்டை வருவதை மறுக்கிறீர்கள் என்றும் என்னிடம் கூற விழைகிறீர்களா-? இன்றிரவு நீங்கள் உங்கள் வீட்டிற்குப் போகும் போது உங்கள் இதயம் நின்று போனால் எப்படியாய் இருக்கும்-? சரியாக ஒரு மணி நேரத்தில் நீங்கள் ஒரு விபத்தில் சிக்கி உங்கள் உடலிலிருந்து இரத்தம் வடிய, நீங்கள் மருத்துவமனையில் கிடந்து கத்திக் கொண்டிருக்கும் போது, உங்களுக்காக ஜெபிக்கும்படி யாருமே இல்லாத நிலையில் இருந்தால் அது எப்படியாய் இருக்கும்-? தேவன், "இப்பொழுது நீ என்னைத் தள்ளினால், நானும் உங்கள் ஆபத்துக் காலத்தில் நகைப்பேன்" என்றார். நீங்கள் வரமாட்டீர்களா-? மெய்யாகவே வரமாட்டீர்களா-? பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றபடியால், நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்கள், அந்த அளவிற்கு நீங்கள் நம்புவதாகவும், ஆனால் பீடத்தண்டை வரமாட்டீர்கள் என்றும் கூறமுற்படுகிறீர்களா-? உங்களுக்கு முன்பாக இருக்கிற உலகத்தின் உடைய காரியம் அப்படி என்ன தான் இருக்கிறது-? 207. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வந்து கொண்டிருக்கின்ற நீங்கள் ஒரு நோய் வாய்ப்பட்ட மனிதர் என்று காண்கிறேன், இல்லையா-? நீங்கள் JTJ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், அப்படித் தானே-? இன்றிரவு பலிபீடத்தண்டை அவர் உம்மை சுகமாக்கப் போகிறார். நீங்கள் எனக்கு ஒரு அந்நியராய் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் யார் என்பதையும் நீங்கள் என்னவாய் இருக்கிறீர்கள் என்பதையும் நானறிவேன். 208. கூட்டத்தில் சரியாக பரிசுத்த ஆவி அங்கே இறங்கினார். (dropped' - விழுந்தது-மொழி பெயர்ப்பாளர்). மேலும், அந்த தேவ தூதன் மேடையின்மேல் நின்று கொண்டு இருக்கிறார். நீங்கள் கூட்டங்களில் இருந்திருக்கிறீர்கள், இவை எதைக் குறிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா-? உங்களுக்குத் தெரியுமா-? இந்த மனிதன் இன்றிரவு சுகமடையப் போகிறார். அங்கிருந்து இவர் எழுந்த உடனேயே தேவன் பேசி விட்டார். 209. மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, முன்னே வா. அழுகையோடும் கண்களில் கண்ணீர் ததும்பியும் வருகிறான். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. முன்னே வா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, வந்து பீடத்தைச் சுற்றி முழங்கால் படியிடுங்கள். நீங்கள் வர மாட்டீர்களா-? ஓ, தேவாட்டுக்குட்டியே. வந்தேன்-! நான்... நான் வந்தேன்-! நான் …. 210. சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. வேறு யாராகிலும் இல்லையா-? இப்பொழுது, அங்கே பின்னால் வாலிப மக்களாகிய உங்களில் சிலர். நீங்கள் வெகு காலமாக வராமல் இருந்து விட்டீர்கள் (put it off for a long time), இதுவே அந்த நேரம். இதுவே அந்த மணி நேரமாய் இருக்கிறது. ...ஒரு இருளான கறையிலிருந்து ஆத்துமா, 211. குழந்தையுடன் இருக்கும் அந்த தாய்க்கு யாராவது உதவி செய்யுங்கள், தயவு கூர்ந்து யாராவது. அவள் பீடத்தண்டை வர விரும்புகிறாள், அவளுடைய கணவர் இங்கே இருக்கிறார். யாராவது அந்த குழந்தைக்கு உதவி செய்யுங்கள் அல்லது குழந்தையை வைத்திருங்கள், தாயானவள் வரட்டும். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. தாயே, வா. அது நல்லது. அவர்கள் உன்னுடைய சிறு குழந்தையை பார்த்துக் கொள்வார்கள். வந்து. இயேசு கிறிஸ்துவுக்காகவும் உன்னுடைய குழந்தைகளுக்காகவும் ஒரு உண்மையான தாயாக இரு. 212. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது நல்லது. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வரவேண்டிய வழி அது தான். உன்னுடைய நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபடு. நரம்பு சம்பந்தமான தொல்லை, பழக்கவழக்கங்கள் மற்றும் காரியங்களை பெற்றவளாய் இருக்கிறாய். இப்பொழுது, அங்கே நின்று கொண்டிருக்கிற உன்னை விட்டு அது நீங்கி விடும். 213. சரியாக இங்கே இந்த இந்த மேடையில், கர்த்தருடைய தூதனானவர் நின்று கொண்டு இருக்கிறார். என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால், இப்பொழுது நான் என்ன கூறுகிறேனோ அதற்கு கீழ்ப்படிந்து அதை செய்யுங்கள். அது சரியானதா என்று பாருங்கள். ஒரு இருளான கறையிலிருந்து என் ஆத்துமாவை மீட்க, ஒவ்வொரு கறைகளையும் சுத்தம் செய்யும் இரத்தத்தை உடைய உம்மிடம் (கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, பையனே.)... ஓ, ஆட்டுக்குட்டியே... (கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, தாயே.) வந்தேன்-! வந்தேன்-! 214. மீதமுள்ளவர்களில் யாராவது வர விரும்புகிறீர்களா-? இன்னும் அங்கே அநேகர் இருக்கிறதாக பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறுகிறார். தேவனோடு உத்தமமாய் இருங்கள், இருக்க மாட்டீர்களா-? நீங்கள் இங்கே பீடத்தண்டை வந்து ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுப்பதனால் என்னத்தை இழந்துவிடப் போகிறீர்கள்-? நீங்கள் எங்கேயாவது ஜெபிக்கத் தான் போகிறீர்கள். நீங்கள் இங்கே ஜெபிக்கவில்லை என்றால், நீங்கள் நரகத்திலிருந்து ஜெபிப்பீர்கள். ஐசுவரியவான் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். இப்பொழுது. நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பீர்கள் என்றால், நான் சத்தியத்தை கூறுகிறேன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால், தேவன் சத்தியத்தை நிரூபித்திருந்தால், சரியாக இப்பொழுது இங்கே இந்த பீடத்தண்டை இருக்க வேண்டிய புருஷர்களும் ஸ்திரீகளும் அங்கே இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டு இருக்கிறார், அவ்விதமே கூறுகிறார். வாருங்கள்-! சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் அவர்களில் ஒருவராக மாத்திரம் இருக்கிறீர்கள். வாருங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் எங்கேயிருந்தாலும் இப்பொழுது வாருங்கள், சிறியவரோ பெரியவரோ, வாருங்கள். 215. நாம் எழுந்து நிற்போம். இப்பொழுது இதன் ஒரு பகுதியை நாம் பாடும் பொழுது, உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கிற அனைவரும் எழுந்து நில்லுங்கள். இப்பொழுது வாருங்கள். சுற்றிலும் வந்து சேருங்கள், பீடத்தண்டை நாம் வருவதற்கு நாம் வழியை உண்டு பண்ணுவோம். நீங்கள் சபையை சார்ந்திருப்பதாக கூறுகிறீர்கள். அது போதாது. "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான். இப்பொழுது வாருங்கள். (ஒவ்வொருவரும்)...நான்... 216. நீங்கள் வெளியே வர மாட்டீர்களா-? நடைபாதையினூடாக நீங்கள் இப்பொழுது சரியாக இங்கே வர மாட்டீர்களா-? இங்கே வந்து பீடத்தண்டை என்னை சந்தியுங்கள். [சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க மேடையிலிருந்து இறங்குகிறார். அவருடைய அநேக வார்த்தைகள் தெளிவாக கேட்க முடியாததாய் இருக்கிறது ஆசி ] ...-? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக ...-?... மேலும் ஒருவர். நான்... (சகோதரன் ஜோ...-?... தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக) உம் இரத்தம் சிந்தப்பட்டது...-?... ... நான்...-?... தேவ..., நான் வந்தேன்-! நான் வந்தேன்-! தாமதிக்காமல் நான், ஒரு இருளான கறையிலிருந்து என் ஆத்துமாவை மீட்க (எத்தனை பேர்-?), ஒவ்வொரு கறைகளையும் சுத்தம் செய்யும் இரத்தத்தை உடைய உம்மிடம், ஓ. ஆட்டுக்குட்டியே, நான்... 217. இங்கு உள்ளவர்களில் எத்தனை பேர், "சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள், நான் முன்னாக வருவதற்கு போதுமான தைரியம் அற்றவனாய் இருக்கிறேன். நீர் எனக்காக ஜெபிக்க வேண்டுமென விரும்புகிறேன்" என்று கூறுகிறீர்கள்-? நாங்கள் மீண்டும் அதைப் பாடும் போது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். முன்னேறி செல்லுங்கள். உங்கள் கரங்களை உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்" என்று கூறுங்கள். சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக...-?... பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார்...-?... நான் கண்டேன்...-?... பரிசுத்த ஆவியினால் அழைக்கப்பட்ட..-?... பீட அழைப்பு...-?... *******